அவை பொருந்துவனவாக இல்லை, என்னெனின், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அதாவது, கி.பி. 250 முதல் கி.பி. 282 வரை மாணிக்கவாசகர் வாழ்ந்தார் என்று மறைமலை அடிகள் ஆராய்ந்து கூறியுள்ளார். அதனையே, திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களும், திருவாங்கூர் பொன்னம்பலம் பிள்ளை அவர்களும், ஒப்புக் கொண்டுள்ளார்கள். மாணிக்கவாசகர் காலத்தில் அரசாண்ட அரசன் அரிமர்த்தன பாண்டியன். அவன் பாண்டி நாட்டை கி.பி.265 முதல் கி.பி. 310 வரை அரசாண்டான். அரிமர்த்தனன் காலத்தில் களப்பிரர் படைஎடுப்பு இல்லை என்பது புராணங்களால் அறியக் கிடக்கின்றது. ஆனால், களப்பிரர் - பல்லவர் படையெடுப்பினால் சோழநாடு அந்நியர் ஆட்சிக்கு உள்பட்டதைக் கருதி, நாட்டைப் பாதுகாக்க, அவன் நால்வகைப் படைகளைப் பலப்படுத்த எண்ணியே மாணிக்க வாசகரை குதிரைகள் வாங்கப் பெருந்துறைக்கு அனுப்பினான். இது நம்பி திருவிளையாடல், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல், வாதவூரர் புராணம், பெருந்துறைப் புராணம் முதலியவற்றால் உறுதி பெறுகிறது. அரிமர்த்தனன் இறந்தபின் அவன் மகன் இரண்டாம் வரகுணன் (கி.பி. 310 - 340 காலத்தில்தான் அதாவது நான்காம் நூற்றாண்டின் மத்தியில் தான் களப்பிர அரசன் பாண்டிநாட்டைக் கைப்பற்றி இருக்கவேண்டும். திருவருட்செயலால் மாணிக்கவாசகரால் குதிரைகள் வாங்கப்படாமல் போய்விடவே, அரிமர்த்தனனே படைவலி குன்றியவனாக இருந்தான். சிறிது எஞ்சியிருந்த குதிரைகளும் இறந்து போயின. ஆகையால், இரண்டாம் வரகுணன் பட்டத்துக்கு வந்தபோது படைவலியே இல்லாமல் இருந்தது. களப்பிரர் இது செய்தியை உளவறிந்து, சோழ நாட்டிலிருந்து பாண்டி நாட்டின்மீது படை எடுத்து வந்து, போரில் இரண்டாம் வரகுணனைக் கொன்று, நாட்டை வெகு எளிதில் கைப்பற்றிக் கொண்டார்கள். | ஆதலால், களப்பிரர் பாண்டிநாட்டைக் கைப்பற்றியது. கி.பி. நான்காம் நூற்றாண்டின் நடுவில் எனக் கொள்க. | | முற்றும். | | |
|
|