பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்362


சிவமயம்
 

ஒன்பதாவது
 

கறைக்கண்டன் சருக்கம்
- - - - -
 

திருச்சிற்றம்பலம்
 

"கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்
நிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்
துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்
அறைக்கொண்ட வேனம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூர னாரூரி லம்மானுக் காளே"

- திருத்தொண்டத் தொகை (8)
திருச்சிற்றம்பலம்