உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
48. கணம்புல்ல நாயனார் புராணம் |
தொகை |
| "கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்" | |
- திருத்தொண்டத் தொகை (8) |
வகை |
| "நன்னக ராய விருக்குவே ளூர்தனி னல்குரவாய்ப் பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து மன்னவ ராய வரற்குநற் புல்லால் விளக்கெரித்தான் கன்னவி றோளெந்தை தந்தை பிரானெங் கணம்புல்லனே" | |
- திருத்தொண்டர் திருவந்தாதி (58) |
விரி |
4055. | திருக்கிளர்சீர் மாடங்க டிருந்துபெருங் குடிநெருங்கிப் பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப்பாற் பிறங்குபொழில் வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல்விளைக்கும் இருக்குவே ளூரென்ப திவ்வுலகில் விளங்குபதி. 1 |
புராணம்: இனி, ஆசிரியர், நிறுத்த முறையானே, ஒன்பதாவது கறைக்கண்டன் சருக்கத்திற் கூறப்படும் அடியார்களின் வரலாறுகள் கூறப்புகுந்து, அவற்றுள், முதலாவது கணம்புல்ல நாயனாரது புராணம் சொல்லத் தொடங்குகிறார். |
தொகை: விடத்தினை உடைய கண்டராகிய இறைவரது வீரக் கழலணிந்த திருவடிகளையே தமக்குக் காவலாகக் கொண்டிருந்த கணம்புல்ல நாயனாராகிய பெரியாருக்கும் (காரி நாயனாருக்கும்) நான் அடியேன். |
கறை - விடம்; நஞ்சு; காப்பு - காவல்; "தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து" (திருமந்) இஃது இந்நாயனாரது அடிமைத் திறத்தின் உறைப்புடைய பண்பு குறித்தது; அடியே - ஏகாரம் பிரிநிலை; நம்பி - ஆடவரிற் சிறந்தோன்; ஆண்பாற்சிறப்புப் பெயர்; பெயரும் பண்பும் தொகை நூல் உணர்த்திற்று. |
வகை: நன்னகராய.....நல்குரவாய் - தமது பதியாகிய நல்ல நகராகிய இருக்கு வேளூரில் பணிசெய்து வாழ்ந்த நாளில் நல்குரவு வரப்பெற்று; பொன்னகராய....எரித்தான் - பொற்பதி எனப்படும் நல்ல தில்லை நகரில் வந்து அங்குத் திருப்புலீச்சரத் திருக்கோயிலினுள் வீற்றிருந்தருளும் அரசராகிய இறைவருக்கு நல்ல கணம் |