பக்கம் எண் :

பெரியபுராணம்365

வடசாரலில் உள்ளது; கையில் விளக்கேந்தியபடி நாயனாரது பழைய காலத்துத்
திருவுருவம் கொடி மரத்தருகில் உள்ளது. நாயனார் வறுமையினால் இங்கு நின்றும்
திருத்தில்லை சென்று திருப்புலீச்சரத்தில் பேறு பெற்றனராதலின் அவரது பெருமை
இங்குக் கொண்டாடப்பெறாது மறக்கப்பட்டுள்ளது. இப்பதியினுக்குத் தலபுராணம் ஒன்று
உண்டு. இப்பதியினருகில் மலைச்சாரலில் கணம்புல் மிகுதியுமுண்டு. இந்நாயனார் இங்கு
நின்றும் நீங்குமுன்னும் வறுமை வந்தபோது புல்லரிந்து விற்கும் தொழில் பூண்டிருந்தார்
என்பது கருதப்படும். என்பது - எனப்படுவது; விளங்குதல் - பெருமையால்
மேம்படுதல்.
 

4056.    அப்பதியிற் குடிமுதல்வர்க் கதிபரா யளவிறந்த
எப்பொருளு முடிவறியா வெய்துபெருஞ் செல்வத்தார்
ஒப்பில்பெருங் குணத்தினா லுலகின்மேம் படநிகழ்ந்தார்
"மெய்ப்பொருளா வனவீசர் கழ"லென்னும் விருப்புடையார்.    2
 
     (இ-ள்) அப்பதியில்......அதிபராய் - அந்தப்பதியில் வாழும்
குடித்தலைவர்களுக்கெல்லாம் தலைவராய்; அளவிறந்த....செல்வத்தார் - அளவில்லாத
எல்லாப் பொருளும் இவ்வளவின வென்று எல்லைகாண முடியாதபடி பொருந்திய
பெருஞ் செல்வத்தையுடையவர்; ஒப்பில்....நிகழ்ந்தார் - ஒப்பில்லாத பெருங்
குணத்தினாலே உலகத்தில் மேன்மையுடன் வாழ்ந்தனர்; மெய்....விருப்புடையார்
உண்மைப் பொருளாவன இறைவரது திருவடிகளேயாம் என்னும் பேரன்பினை
உடையவர்.
 
     (வி-ரை) குடி முதல்வர்க்கு அதிபர் - குடிகள் பலவாக. அவை
ஒவ்வொன்றுக்கும் தலைவர் ஒவ்வொருவராக, அத்தலைவர்க்கெல்லாம் இவர் அதிபர்
என்பது.
 
     அளவிறந்த எப்பொருளும் முடிவறியா - அளவிறந்த எப்பொருளும்
என்பது பொருள்களின் வகைகளையும், முடிவறியா என்பது அவ்வவற்றின்
தொகைகளையும் குறித்தன; எப்பொருளும் - உம்மை முற்றும்மை; பொருள் -
பொருட்செல்வங்களின் வகை; மக்களுக்கு இன்றியமையாது வேண்டுவனவாகிய
பொருள்கள் எல்லாம்; மனை, வயல், நெய், மணி முதலாயின பெருங்குணம் -
உலகியல் பற்றிய நற்குணங்கள்.
 
     மெய்ப்பொருளாவன - அழியாத் தன்மையினவாய் அத்தன்மையைப்
பயப்பிப்பனவாய் உள்ள தன்மைகள் மெய்த்தன்மை எனப்பட்டது. "எப்பொரு
ளெத்தன்மைத் தாயினு மப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு" (குறள்);
தம்முடையனவாகிய ஏனைய வெல்லாம் பொருள் அல்ல, இறைவர் கழலே
பொருளாவன என்பது; அப்பெருஞ் செல்வமெல்லாம் இறைவர்பால் ஆக்கின அளவே
பொருளெனப்படும்; அதன் பொருட்டே தரப்பட்டன என்ற உணர்வு. மேல் வரும்
பாட்டு பார்க்க.
 
     நிகழ்ந்தார் - விருப்புடையார் - என்று முடிக்க. பெயர்ப் பயனிலை.
 
4057. "தாவாத பெருஞ்செல்வந் தலைநின்ற பயனிது"வென்
றோவாத வொளிவிளக்குச் சிவன்கோயி லுள்ளெரித்து

நாவாரப் பரவுவார் நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான் றிருத்தில்லை சென்றடைந்தார்.          3
     (இ-ள்) தாவாத....என்று - கெடாத பெருஞ்செல்வங்களாற் பெறுஞ் சிறந்த பயன்
இதுவேயாம் என்று துணிந்து; ஓவாத....பரவுவார் - நீங்காத ஒளி தரும் திரு