பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்366

விளக்குக்களைச் சிவபெருமான் றிருக்கோயிலினுள்ளே எரித்து நாவாரத் துதிப்பாராகிய
இந்நாயனார்; நல்குரவு.....அடைந்தார் - வறுமை வந்து அடையவே, (வறுமையுடன்
ஈண்டிருத்தல் தகாதென்று) தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாராகிய இறைவர்
எழுந்தருளியுள்ள திருத்தில்லையினைப்போய் அடைந்தனர்.
 

     (வி-ரை) தாவாத - கெடாத; தலைநிற்றல் - சிறத்தல்; பயன் இது - செல்வம்
பெற்றபயன் இதுவேயாம் என்பது; பிரிநிலை ஏகாரம் தொக்கது. "படைத்த நிதிப்பயன்
கொள்வார்" (4117), "வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்" (504)
என்பன முதலியவை காண்க.
 
     ஓவாத - நீங்காத; இடையறாத.
 
     நாவார - ஆர்தல் - நிரம்புதல்.
 
     பரவுவார் - வினைப்பெயர்; பரவுவார் - அடைந்தார் என்று கூட்டுக.
 
     நல்குரவு.....அடைந்தார் - "செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே"
(தேவா) என்றபடி நல்குரவு எல்லாவற்றையும் நீக்கும் பெருஞ்செல்வ முடையராகிய
இறைவர் வெளிப்பட வீற்றிருந்தருளும் இடமாதலின் தில்லைக்குச் சென்றடைந்தார்
என்பது குறிப்பு.
 
4058. தில்லைநகர் மணிமன்று ளாடுகின்ற சேவடிகள்
அல்கியவன் புடனிறைஞ்சி யமர்கின்றார் புரமெரித்த
வில்லியார் திருப்புலீச் சரத்தின்கண் விளக்கெரிக்க
இல்லிடையுள் ளனமாறி யெரித்துவரு மந்நாளில்,                     4
 
4059. ஆயசெயன் மாண்டதற்பி னயலவர்பா லிரப்பஞ்சிக்
காயமுயற் சியிலரிந்த கணம்புல்லுக் கொடுவந்து
மேயவிலைக் குக்கொடுத்து விலைப்பொருளா னெய்மாறித்
தூயதிரு விளக்கெரித்தார் துளக்கறுமெய்த் தொண்டனார்.              5
 
     4058. (இ-ள்) தில்லைநகர்....அமர்கின்றார் - திருத்தில்லை நகரத்தில் அழகிய
திருவம்பலத்திலே ஆடுகின்ற திருவடிகளினிடத்தே தங்கிய அன்போடும் வணங்கி
அங்கு விரும்பியிருக்கின்றாராகிய நாயனார்; புரமெரித்த....எரிக்க - முப்புரங்களையும்
எரித்த வில்லை ஏந்திய இறைவரது திருப்புலீச்சரம் என்னும் திருக்கோயிலில் விளக்கு
எரிக்கும் திருப்பணி செய்வதற்கு; இல்லிடை...அந்நாளில் - தமது மனையில்
உள்ளனவாகிய சங்கமப் பொருள்களை விற்று எரித்து வருகின்ற அந்நாளில்,
 

4
 

     4059. (இ-ள்) ஆயசெயல் மாண்டதற்பின் - அவ்வாறாகிய அந்தச் செய்கையும்
(மனையில் விற்றற்குப் பொருளின்மையால்) நீங்கிய பின்பு; அயலவர்பால் இரப்பு அஞ்சி
- பிறர்பால் இரத்தற்றொழிலை அஞ்சி; காய முயற்சியில்....நெய்மாறி - தமது உடம்பின்
முயற்சியாலே அரிந்த கணம்புல்லினை அரிந்தெடுத்துக்கொண்டு வந்து கிடைத்த
விலைக்குக் கொடுத்து அவ்வாறு பெற்ற விலைப் பொருளினாலே நெய்வாங்கி;
தூய.....தொண்டனார் - அசைவில்லாத மெய்ம்மைத் தொண்டுபுரிவாராகிய நாயனார்
தூய்மையாகிய திருவிளக்கினை எரித்தனர்.                              5
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
 
     4056. (வி-ரை) அல்கிய - தங்கிய; அல்கல் - தங்குதல்; சிவன்பணி செய்வோர்
வறுமை வந்தபோது அன்பு குறைந்து வெறுப்பும் அடைவது உலகியல்பு