| குறையாத தமிழ்க்கோவை தம் பெயராற் குலவும் வகை முறையாலே தொகுத்தமைத்து - என்றதனால் காரிக்கோவை என்றதோர் அகப்பொருட்டுறைக் கோவை நூல் இவரால் செய்யப்பட்டதென்று தெரிகிறது. இந்நூலைப் (அல்லது நூல்களைப்) பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை; முறை - தமிழ் இலக்கணம் வகுத்த முறை; தொகுத்து - சொற்பொருட் பாகுபாடுகள் சிறக்கும்படி சேர்த்து; அமைத்தல் - இயற்றுதல். இஃது இநாயனார் இறைவர்பாற் செல்லும் வகையால் உயிர்க்குறுதியாக அமைத்த நூல். |
மூவேந்தர் பாற்பயில்வார் - தமிழ் முடிமன்னர் மூவர்கள். சேர சோழ பாண்டியர்கள். பாலும் என முற்றும்மை விரிக்க. பயிலுதல் - சென்று பழகிய நட்புப் பெற்று ஒழுகுதல். |
பயில்வார் - நயமாக்கிப் - பெற்ற - குவைகொண்டு - சமைத்தார் என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க. 1 |
4065. (வி-ரை) அடுத்த உரை - மேற்கொண்ட பொருளுக் கேற்றபடி அடுத்த சொல்; உரை நயம் - சொன்னயம். |
வெங்கண் அரா - வெம்மை - கொடுமை செய்யும்; பார்வையாலே விடத்தன்மை செய்யும் பாம்புகளும் உள; திருஷ்டிவிஷம் என்பது வடிமொழி. |
அராவொடு கிடந்து விளங்கும் இளம்பிறை - கிடந்தும் என்று உயர்வு சிறப்பும்மை தொக்கது; அராவுடன் கிடந்தால் வாடுதல் மதியின் தன்மை; அவ்வாறு கிடந்தும் விளக்க முறுதல் சிவனருள் வலிமை என்பது குறிப்பு. |
இனிதமரும் தாளங்கள் - விளங்க வீற்றிருக்கும் கோயில்கள்; சமைத்தல் - உள வாக்குதல். 2 |
| 4066. | யாவர்க்கு மனமுவக்கு மின்பமொழிப் பயனியம்பித் தேவர்க்கு முதற்றேவர் சீரடியா ரெல்லார்க்கும் மேவுற்ற விருநிதிய மிகவளித்து விடையவர்தங் காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினராய், 3 |
| 4067. | எய்ந்தகடல் சூழுலகி லெங்குந்தம் மிசைநிறுத்தி யாய்ந்தவுணர் விடையறா வன்பினரா யணிகங்கை தோய்ந்தநெடுஞ் சடையவர்த மருள்பெற்ற தொடர்பினால் வாய்ந்தமனம் போலுடம்பும் வடகயிலை மலைச்சேர்ந்தார். 4 |
4066. (இ-ள்) யாவர்க்கும்.....இயம்பி - யாவருக்கும் மனமகிழும்படி யாகிய இன்பம் தரும் சொற் பயன்களையே சொல்லி; தேவர்க்கு......மிக அளித்து - தேவர்க்கெல்லாம் பெருந்தேவராகிய சிவபெருமானது சிறப்புடைய அடியார்கள் எல்லாருக்கும் பொருந்திய பெருநிதியங்களை மிகவும் அளித்து; விடையவர்தம்.....கருத்தினராய் - இடபத்தினை உடைய இறையவரது சோலைகள் பொருந்திய திருக்கயிலாயத்தினை எப்போதும் மறவாத கருத்துடையவராகி, 3 |
4067. (இ-ள்) ஏய்ந்த.......நிறுத்தி - பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் தமது புகழினை நிலைநிறுத்தி; ஆய்ந்த.....அன்பினராய் - ஆராய்ந்து தெளிந்த உணர்விலே இடையறாத அன்புடையவராகி; அணி...தொடர்பினார் - அழகிய கங்கையாறு தோய்ந்த நீண்ட சடையினையுடைய இறைவரது திருவருளைப் |