| பெற்ற தொடர்ச்சியினாலே; வாய்ந்த....சேர்ந்தார் - பொருந்திய மனத்தினாற் சேர்ந்தது போலவே உடம்பினாலும் வடகயிலை மலையினைச் சேர்ந்தனர். |
| 4 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4066. (வி-ரை) இன்பமொழிப் பயனியம்புதலாவது - இன் மொழியினையே எல்லாரும் மகிழ்வர்; அந்த இன்ப மொழிதானும் இறைவர் புகழ்கூறப் பெறின் அதன் பயனைப் பெறும்; என்ற உண்மையின்படி உலகினருக்குச் சொல்லுதல். |
தேவர்க்கு முதற்றேவர் - சிவபெருமான்; முதல் - முதல்வர்; சங்காரகாரணனாகிய முதல்வன் சிவன் என்ற கருத்து. |
விடையவர்தம் - திருக்கயிலை என்று கூட்டுக. விடையவர்தம் காவுற்ற - செலுத்துகின்ற இடபவாகனத்தையுடைய சிவனார்; கா - சுமத்தல் - செலுத்துதல்; என்றலுமாம். நந்தி தேவரது காவல் பொருந்திய என்றலுமாம். |
காவுற்ற - சோலைகள் சூழ்ந்த; கா - சோலை; விடையவர்தாம் காவுற்ற என்பது பாடமாயின் சிவபெருமான் அடியாரைக் காத்தற்றொழில் செய்யும் என்க. கா - காத்தல் . 3 |
4067. (வி-ரை) இசை நிறுத்துதலாவது தமது புகழ் நிலைபெறச்செய்தல். |
ஆய்ந்த வுணர்வு -ஆய்தல் -ஆராய்ந்து தெளிதல்; உணர்வு -உணர்விலே; தொடர்பு - பொருத்தம் - காரணம். இடையறா அன்பு - “அயரா அன்பு” (போதம் -11) |
மனம்போலுடம்பும் வடகயிலை மேவுதலாவது - முன்னர் மறவாமையினால் மனம் கயிலையை எப்போதும் சேர்ந்திருந்தது. இப்போது உடம்பும் கூடிச் சீவன் முத்தராய்த் திருக்கயிலை மலையினிற் சேர்ந்தமர்ந்தனர் என்பதாம். 4 |
| 4068. | வேரியார் மலர்க்கொன்றை வேணியா ரடிபேணுங் காரியார் கழல்வணங்கி யவரளித்த கருணையினால் வாரியார் மதயானை வழுதியர்தம் மதிமரபிற் சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம். 5 |
(இ-ள்) வேரியார்....கருணையினால் - தேன் பொருந்திய மலராகிய கொன்றையை அணிந்த சடையினை உடைய இறைவரது திருவடியைப் பேணுகின்ற காரி நாயனாரது கழல்களை வணங்கி; அவர் அளித்த கருணையினால் - அவர் செய்த கருணைத் திறத்தின் துணையினாலே; வாரி ஆர்.......நெடுமாறர் - கடல்போல நிறைந்து வழிகின்ற மதம் பொருந்திய யானைப் படையினையுடைய பாண்டியர்களுக்குரிய சத்திரவமிசத்திலே நின்றசீர்நெடுமாற நாயனாரது; திருத்தொண்டு செப்புவாம் - திருத்தொண்டினைச் சொல்வோம். |
(வி-ரை) இஃது இச்சரித முடிப்பும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாம். இது கவிக்கூற்று. இப்பாட்டுத் திரிபு என்னும் சொல்லணி. |
வேரி - மணமுமாம். பேணுதல் - விரும்பி வழிபடுதல்; ஆர்தல் - நிறைதல். |
மதயானை - இச்சரிதத்துள் வரும் போர்க் குறிப்பு. |
கருணையினால் - கருணையின் துணையினால். |
வாரி - கடல் - இங்குக் கடலின் தன்மையாகிய நிறைவு குறித்தது; ஆர்தல் - பொருந்துதல்; வாரி - ஆர் - கடல்போல நிறைந்த. |
வழுதியர் தம் மதிமரபு - பாண்டியர்க்குரிய சந்திரவமிசம்; பாண்டியர் சந்திர மரபினர்; (சோழர் சூரிய மரபினர்); சீரியார் - நின்ற சீருடையார். |