பக்கம் எண் :

பெரியபுராணம்377


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

50. நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“நிறைக்கொண்ட சிந்தையை னெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (8)
 

வகை
 

    
கார்த்தண் முகிற்கைக் கடற்கா ழியர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ஈழிந்தது கண்டுமற்
றாங்கவரைக்
கூர்த்த கழுவி னுதிவைத்த பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதபண்டு நெல்வே லியில்வென்ற மாறனுக்கே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (60)
 

விரி
 

4069. டுமாறு நெறியதனைத் தவமென்று தம்முடலை
அடுமாறு செய்தொழுகு மமண்வலையி லகப்பட்டு
விடுமாறு தமிழ்விரகர் வினைமாறுங் கழலடைந்த
நெடுமாற னார்பெருமை யுலகேழு நிகழ்ந்ததால்.             1
 
     புராணம்: இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், ஒன்பதாவது, கறைக்கண்டன்
சருக்கத்தில் மூன்றாவது நின்றசீர் நெடுமாற நாயனார் புராணங் கூறத்தொடங்குகின்றார்;
அந்நாயனாரது சரிதவரலாறும் பண்புங் கூறும் பகுதி.
 
     தொகை: நிறையினை மேற்கொண்ட சிந்தையினாலே நெல்வேலிப் போரினை
வென்றவராகிய நின்றசீர் நெடுமாறனுடைய அடியார்க்கும் நான் அடியேனாவேன்.
 
     நிறைக்கொண்ட சிந்தையால் - மண்ணாசை குரோதம் முதலியதீய
எண்ணங்களாலன்றித், தம் நாடுகாவல் பற்றிய நீதிமுறையாலே; நெல்வேலி -
திருநெல்வேலியில் நிகழ்ந்த போர்; இப்போரினை, மேல், வகை நூலும் விரிநூலும்
விரித்தமை காண்க; நெடுமாறன் - இப்பாண்டியரது பெயர் - நின்ற சீர் என்பது
சரிதவரலாற்றிற் கண்ட பண்பு காரணமாகப் போந்த பெயர்; பெயரும் வரலாறும்
பண்பும் தொகைநூல் பேசிற்று.
 
     வகை: கார்த்தண்....கண்டு - கரிய தண்ணிய முகிலைப் போன்ற கையினையுடைய
கடற்காழியவரது பெருமானாகிய ஆளுடைய பிள்ளையாருக்குப் பகையாய்