ஆர்த்துவந்த சமணர்கள் வாதில் தோற்று அழிவெய்தியதைக் கண்டு (பின்னர்); ஆங்க....பஞ்சவனென்று - தோல்வியுற்ற அவ்விடத்தே அவ்வமணர்களைக் கூர்மையுடைய கழுவின் முனையிலே ஏற்றிவைத்த பாண்டியர் என்று; உரைக்கும் வார்த்தையது - சொல்லும் புகழானது; பண்டு....மாறனுக்கே - முன்னாளில் நெல்வேலிப் போரினில் வெள்ளி கொண்ட பாண்டியருக்கே (உரியது). |
கார் - கரிய; கார் காலமும் ஆம்; முகிற்கை - முகில்போன்று கைம்மாறு கருதாது கொடுக்கும் கைவளமாகிய உதவி; ஆர்த்தல் - ஆரவாரித்தல்; வாதுசெய்தல். |
அழிந்தது - வாதில் தோற்றதனை; இரண்டனுருபு விரிக்க; மற்று -அசை; மற்று - மறுத்தப் பகைத்த என்றலுமாம். இப்பொருளில் மற்று என்பது ஈற்றகரங்கெட்ட தென்க; கூர்த்த - கூரிய; நுதி - முனை; நுதிவைத்தல் - நுனியில் தைக்க ஏற்றுதல்; நுதிவைத்த - “கழுவேற்றுக” என்று அரசாணை செய்த; வார்த்தை - புகழ்ச்சொல்; பண்டு - முன்னாளில்; உரியது என்பது குறிப்பெச்சம். |
பெயரும் வரலாறும் பண்பும் திருத்தொண்டும் வகைநூல் வகுத்தது. |
விரி: 4069. (இ-ள்) தடுமாறு.......என்று - தடுமாற்றத்தை விளைக்கும் புரை நெறியினையே தவமென்று கொண்டு; தம் உடலை....அகப்பட்டு - தமது உடலை வருத்துகின்ற செயல்களைச் செய்து தீநெறி ஒழுகும் அமணரது சூழ்ச்சியினுள் அகப்பட்டு; விடுமாறு.....அடைந்த - அவ்வலையினின்றும் விடுபடும்படி தமிழ்விரகராகிய ஆளுடைய பிள்ளையாரது, வினைமாற்றிப் பிறவியறுக்கும் திருவடிகளை அடைந்த; நெடுமாறனார்...நிகழ்ந்தது - நெடுமாறனாரது பெருமையானது ஏழு உலகங்களிலும் நிறைந்து விளங்கியது; ஆல் - அசை. |
(வி-ரை) தடுமாறு நெறி - தடுமாற்றத்தை விளைக்கும் நெறி; தவமென்று.......ஒழுகும் - பலவாறும் உடலை வருத்துதலே தவமாமென்னும் அமணர் கொள்கையும் ஒழுக்கமும்; அடுதல் - சுடுபாறைகிடத்தல் - வெயிலினிற்றல் முதலாயின. |
விடுமாறு - விட்டு நீங்கும்படி. |
வினைமாறும் கழல் - மாற்றும் என்னும் பிறவினை மாறும் எனத்தன்வினையாய் வந்தது; “கழறொழ நினைப்பவ ரிருவினைத்துயர் போமே” “பிறவியென்னும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோற்றோணி” (நம்பியாண்டார் நம்பிகள்). |
நிகழ்ந்தது - விளங்கியது. 1 |
| 4070. | அந்நாளி லாளுடைய பிள்ளையா ரருளாலே தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த் தறமளித்துச் சொன்னாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் றனைக்கொண்ட பொன்னார மணிமார்பிற் புரவலனார் பொலிகின்றார், 2 |
| 4071. | ஆயவர சளிப்பார்பா லமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார், 3 |
| 4072. | எடுத்துடன்ற முனைஞாட்பி னிருபடையிற் பொருபடைஞர் படுத்தநெடுங் கரித்துணியும் பாய்மாவி னறுகுறையும் |