பக்கம் எண் :

பெரியபுராணம்379

  அடுத்தமர்செய் வயவர்கருந் தலைமலையு மலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம் வடிவேல்வாங் கிடப்பெருக,                  4
 
4073. வயப்பரியின் களிப்பொலியு மறவர்படைக் கலவொலியுங்
கயப்பொருப்பின் முழக்கொலியுங் கலந்தெழுபல் வியவொலியும்
வியக்குமுகக் கடைநாளின் மேகமுழக் கெனமூளச்
சயத்தொடர்வல் லியுமின்று தாம் விடுக்கும் படிதயங்க,                 5
 
4074. தீயுமிழும் படைவழக்குஞ் செருக்களத்து முருக்குமுடல்
தோயுநெடுங் குருதிமடுக் குளித்துநிணந் துய்த்தாடிப்
போயபரு வம்பணிகொள் பூதங்க ளேயன்றிப்
பேயுமரும் பணிசெய்ய வுணவளித்த தெனப்பிறங்க,                    6
 
4075. இனையகடுஞ் சமர்விளைய விகலுழந்த பறந்தலையிற்
பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து
முனையழிந்த வடிபுலத்து முதன்மன்னர் படைசரியப்
புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து,               7
 
4076. வளவர்பிரான் றிருமகளார் மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார்
இளவரவெண் பிறையணிந்தார்க் கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி யருள்பெருக வரசளித்தார்.                  8
 
     4070. (இ-ள்) அந்நாளில்.....பெருக - அக்காலத்தில் ஆளுடைய பிள்ளையாரது திருவருளினாலே பாண்டிநாட்டிற் சைவத்திறம் பெருகியிட; செங்கோல்.....போற்றி - செங்கோல் அரசாட்சி செய்து அறநெறி வழுவாமற் காத்தும் எடுத்துச் சொல்லப்படும் சிவநாமமாகிய திருவைந் தெழுத்தின் நெறியாகிய சைவநெறியினைக் காத்தும், சுரர்நகர்க்கோன்.....பொலிகின்றார் - தேவேந்திரனிடத்துக் கொண்ட பொன்னாரமணிந்த மார்பினையுடைய அப்பாண்டியனார் விளங்குகின்றாராகி;                     2
 
     4071. (இ-ள்) ஆய.......பால் - அத்தன்மையாகிய அரசுசெய்பவரிடத்தே; சமர்வேண்டி......களத்து - போரினை வேண்டிவந்து எதிர்த்த வடிபுலத்து பகைவர்க்கெதிரே திருநெல்வேலிப் போர்க்களத்தில்; பாய.....கடக்கின்றார் - பரவிய சேனைக் கடலையும், வேகமாகச் செல்லும் குதிரைகளின் மிகுதியாகிய வெள்ளத்தையும், சினந்து அழிக்கும் மதயானைகளின் வரிசையினையும் பரப்பிப் போரினை வென்று கடக்கின்றாராகி;                                                     3
 
     4072. (இ-ள்) எடுத்து.....ஞாட்பின் - படையெடுத்துப் பொருத போர்க் களத்திலே; இருபடையில்...மடுத்தகடல் - இருபக்கத்துச் சேனை வீரர்களும் வீழ்த்திய நீண்ட யானைகளின் உடற்றுண்டங்களும் குதிரைகளினுடல்கள் அறுபட்ட துண்டங்களும் எதிர்த்துப் போர்செய்யும் சேனை வீரர்களின் கரிய தலைமலையும் ஆகிய இவற்றின் வரும் குருதியின் பெருக்கினைக் கலக்கப்பெற்ற கடலானது; மீளவும்.....பெருக - முன்னே உக்கிரகுமார பாண்டியர் கடல் சுவர வேல் வாங்கியதுபோல மீண்டும் இவர் வேல்வாங்கும்படி பெருக.                                              4