பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்382

அலர்; தற்காப்பின் பொருட்டே இதனை மேற்கொண்டார் என்பது “நிறைக் கொண்ட
சித்தையா னெல்வேலி வென்ற”
என்றதன் குறிப்பாகும்.
 
     பாய - எங்கும் பரவிய;
 
     படைக்கடல் - பரிமா வெள்ளம் - களிற்றின் நிரை - சேனைகள் பெரும்
அளவினவாதலின் அவற்றைக் கடல் - என்றும், அவற்றிற் சுருங்கினவாதலின் பரிகளை
வெள்ளம் - என்றும், யானைகள் அவற்றினும் சுருங்குதலின் நிரை - என்றும் கூறியது
கவிநயம்.
 

     பரப்பி - அணிவகுத்துப் பரப்பி நிறுத்தி.
 

     அமர் கடக்கின்றார் - போரினை வென்று மேற்செல்கின்றாராய்; கடத்தல் -
அழித்து மேற்செல்லுதல்;                                       3
 
     4072. (வி-ரை) எடுத்து - படையெடுத்து; உடன்ற - மாறுபட்ட; பொருத;
முனைஞாட்பு - போர்க்களம். இருபெயரொட்டு;
 
     படுத்த - வெட்டி வீழ்த்திய, கொன்ற; துணி - துண்டங்கள்.
 
     அறுகுறை - அறுபட்ட குறை உடல்கள்
 
     பாய்மா - குதிரை; கருந்தலை மலை - மலைபோலக் குவிக்கப்பட்ட வீரர்களின்
கரியதலைகள்; தலைக்குவியல் பற்றிச் புகழ்ச்சோழநாயனார் புராணவரலாறு பார்க்க.
     செந்நீர்....பெருக - இரத்த ஆறுபாய்ந்து கடல் பெருகிற்று; அது பெருகிய
செயல் முன் உக்கிரகுமார பாண்டியர், பெருகிவந்த கடல்சுவற வேல்வாங்கியது போல
மீளவும் இவர்வேல், செந்நீர் - (இரத்தம்) வாங்கும்படி பெருகியது போன்றதென்பதாம்.
 
     மீளவும் - முன் அவர் யெய்த அது போல மீண்டும் இவர் வாங்கிட என்று
உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. மேற்பாட்டில் வல்லியும் என்ற இடத்தும்
இவ்வாறே கொள்க.
 
     வாங்கிட - வலித்து எறிந்திட.
 
     அவர் செந்நீர் - என்பதும் பாடம்.                              4
 
     4073. (வி-ரை) படைக்கல ஒலி - படைக்கலங்களைச் சுழற்றுதல் வீசுதல் எறிதல்
மோதுதல் இவற்றால் எழும் ஒலி; வயம் - வெற்றி.
 
     கயப் பொருப்பு - பொருப்பு - மலை; மலை போன்ற யானை; கயம் - யானை;
முழக்கு - பிளிற்றொலி;
 
     பல்லியம் - இவை போரில் வீரர்களுக்கு ஊக்கம் தர முழக்கப்படுவன, வெற்றிச்
சங்கு, முழவு, முதலியனவுமாம். முருக்கும் - உடல் - வெட்டுண்ட உடல்களில்;
 
     ஒலி - இவை ஒவ்வோர் பொருள் குறிப்பன ஆதலின் ஒலி என்றார்.
 
     உகக்கடை நாளின் மேக முழக்கு என - உகக்கடை நாள் - நீரூழி;
முன்கூறிய பலவகைப் பேரொலிகளும் கூடுதலின் பெருமுழக்காயின என்பார் வாளா
மேக மென்னாது உகக்கடை நாளின் மேகம் என அடைகொடுத் தோதினார். முன்
உக்கிரகுமார பாண்டியர் வரலாற்றிற் போந்த பெரு மேகக்கூட்டங்களின் குறிப்புமாம்.
     மீள - மீளவும்; இறந்தது தழுவிய எச்சவும்மை விரிக்க.
 
     சயத் தொடர் வல்லியினையும் - விடுக்கும்படி - சயத் தொடர்வல்லி -
வெற்றியினால் பகைவரைப் பிணிக்கும் விலங்கு. விடுத்தல் - ஏவுதல்; வல்லியினையும்
- என இரண்டனுருபும் சாரியையும் விரிக்க; தொடர் - பிணிப்படுக்கும் எனப் பிற
வினைப் பொருளில் வந்தது.