பக்கம் எண் :

பெரியபுராணம்383

     தயங்குதல் - விளங்குதல்.
 
     எனமூள - என்பதும் பாடம்.                                        5
 
     4047. (வி-ரை)   தீ - படைகள் மோதுதலால் தீப்பொறி பறக்கும் என்பது; தீ
உமிழும்
- தீப்போன்று ஒளிவிளங்கும் என்றுமாம்.
 

     படைவழங்குதல் - படைகளை ஏவிப் போர்புரிதல்.
 

     முருக்கும் - வெட்டப்பட்ட; உடல்தோயும் நெடுங்குருதி - குறை உடல்கள்
அங்கு வடிந்து நின்ற இரத்தப்பெரு மடுவில் தோய்ந்துகிடந்தன என்பது. Body lay in
a pool of blood
என்பர் நவீனர்.
 
     குருதி மடுக்குளித்து - இரத்தமாகிய மடுவிற் குளித்து.
 
     நிணம் துய்த்து - நிணத்தினை உண்டு; நிணம் - இறைச்சி; ஆடி - கூத்தாடி;
இவை போர்க்களத்திற் கூடும் பேய்களின் செயல்களாகக் கூறப்படுவன, “சூர் முத
றடிந்த சுடரிலை நெடுவேல்.....துணங்கை தூங்க” என்ற திருமுருகாற்றுப்
படைப்பகுதியும், பரணி நூல்களில் பேய் - காளி - பூதம் முதலியவற்றைப்பற்றி
உரைப்பனவும் இங்குக் கருதத்தக்கன.
 
     போயபருவம் - முன்காலத்தில்; பணிகொள் பூதங்களேயன்றி - நெல்வேலிப்
போரில் வடபுலமன்னரின் விறலினை நோக்கிப் பாண்டியன் சிவனை நினைய,
நெல்லையப்பர் ஏவலினால் சிவபூதகணங்கள் வந்து பகைவரை அழித்தன என்பது
தலபுராண வரலாறு.
 
     உணவு அளித்த தென - பேய் பூதங்களுக்கு விருந்து அளித்தது என்று
சொல்லும்படி.
 
     பிறங்குதல் - விளங்குதல்.                                         6
 
     4075. (வி-ரை) நெடுஞ்சமர் - கொடுமையாலும் காலத்தாலும் நீண்ட போர்.
 
     பனைநெடுங்கை மதயானை - 'பனைக்கை மும்மத வேழம்’ (அரசு - தேவா)
 
     இகலுழந்த - போர்புரிந்த; பறந்தலை - போர்க்களம்.
 
     பஞ்சவனார் - பாண்டியரது; ஆறனுருபு விரிக்க.
 
     முனை அழித்த - போரில் தோற்ற; முதன் மன்னர் - முதன்மை பெற்ற
அரசர்; முதன்மையாவது படை வீரம் முதலியவற்றால் மேம்படுதல்; சரிதல் - அழிந்து
சிதைதல்; இறத்தல்; முதன்மன்னர் - முதன் மன்னராயிருந்தும் அவர் படை சரிய
என்று இழிவு சிறப்பும்மை விரிக்க.
 
     புனையும் நறும்தொடை வாகை - புனையும் - வெற்றி பெற்றோர் புனைதற்குரிய வாகைத்தொடை என்க. வாகை மாலை சூடுதல் வெற்றிக்குறி; வாகை -
வெற்றிமாலை.
 
     பூழியர் வேம்பு - வேப்பமாலை பாண்டியர்க்குரியது பூழியர் - பாண்டியர்.  7
                                          
 
     4076. (வி-ரை) வளவர்பிரான் - சோழ அரசருக்கு; நான்கனுருபுவிரிக்க.
“வளவர்கோன் பாவை” (தேவா).
 
     மங்கையருக்கரசியார்.....கவுரியனார் - கவுரியனார் - நெடுமாற பாண்டியர்;
மங்கையர்க்கரசியாரது கணவனார் என்றபடி; “முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு
நீறுந்தன் மார்பினின் முயங்கப், பத்தியார் கின்ற பாண்டியமா தேவி” (தேவா).
 
     இளஅரவு வெண்பிறை - இள அரவினையும் வெள்ளிய பிறையினையும் என்க.
எண்ணும்மைகள் தொக்கன. “இள நாகமொ டேனம்” (தேவா). அரவு, அர அரா -
என்பன ஒரு சொல்.