பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்384

     ஏற்ற திருத்தொண்டெல்லாம் - விளக்கி - சிவனுக் குகந்தனவாக
விதிக்கப்பட்ட திருத்தொண்டின் வகைகளை எல்லாம் விளக்கி; விளக்குதல் - செய்தும்
செய்வித்தும் உலகறியப் பண்ணுதல்.
 
     அருள் பெருக - சிவபிரானருள் பெருக உளதாகும்படி;
 
     இளவளவெண் - தொண்டரொல்லாம் - என்பனவும் பாடங்கள்.       8
 

4077.   

திரைசெய்கட லுலகின்கட் டிருநீற்றி னெறிவிளங்க
உரைசெய்பெரும் புகழ்விளக்கி யோங்குநெடு மாறனார்
அரசுரிமை நெடுங்கால மளித்திறைவ ரருளாலே
பரசுபெருங் சிவலோகத் தின்புற்றுப் பணிந்திருந்தார்.                 9
 
     (இ-ள்) திரைசெய்........நெடுமாறனார் - அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகில்
திருநீற்று நெறியாகிய சிவநெறி விளக்கமடையும்படி எடுத்துச் சொல்லப்படும் பெரிய
புகழினை விளங்கவைத்ததனால் மேன்மை பொருந்திய நின்றசீர் நெடுமாற நாயனார்;
அரசுரிமை.......அளித்து - நீண்டகாலம் அரசாட்சி செய்திருந்து;
இறைவரருளாலே...பணிந்திருந்தார் - சிவபெருமானது திருவருளாலே எல்லாராலும்
பரவப்படுகின்ற பெரிய சிவலோகத்தினை அடைந்து இன்பம் பொருந்திப்
பணிந்தமர்ந்திருந்தனர்.
 
     (வி-ரை) திருநீற்றின் நெறி - சிவநெறி; விளங்க....விளக்கி - முன்னர்ப்
“பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழி”ந்த நிலையும் (1916), “இருவர்தம் பாங்கு
மன்றிச் சைவமங் கெய்தா தாக” (2501) என்ற நிலையும், நீங்கித் திருநீறு எங்கும்
விளங்கிற்று என்று சொல்லப்பெறும் பெரும்புகழினை விளக்கி;
 
     ஓங்கும் - அதனால் ஓங்கிய; ஓங்கும் - “வேந்தனு மோங்குக” என்ற திருப்பா
கரத்தினாலே கூனிமிர்ந்தோங்கிய (2746) என்ற குறிப்புமாம்.
 
     நெடுங்காலம் அரசுரிமை அளித்து - நீண்ட நாள் அரசாட்சி செலுத்தி; சிவ
லோகத்து....இருந்தார் - பணிதலால் இன்ப முற்று நிலை பெற்றிருந்தனர்; இன்பம் -
சிவானந் தானுபத்திற் றிளைத்தல்; பணிந்து - முத்த நிலையிலும் ஆண்டானடிமைத்
திறமே உள்ளது; “உயிர்தானும் சிவானுபவ மொன்றினுக்கே யுரிந்து” (சித்தி)        9
        
 
4078. பொன்மதில்சூழ் புகலிகா வலரடிக்கீழ்ப் புனிதராந்
தென்மதுரை மாறனார் செங்கமலத் கழல்வணங்கிப்
பன்மணிக டிரையோதம் பரப்புநெடுங் கடற்படப்பைத்
“தொன்மயிலை வாயிலார்” திருத்தொண்டி னிலைதொழுவாம்.          10
 
     (இ-ள்) பொன்.....வணங்கி - பொன் பூண்ட மதில்சூழ்ந்த சீகாழிக் கதிபாராகி
ஆளுடைய பிள்ளையாரது திருவடிச் சார்பினாலே புனிதராகிய தென்மதுரையில்
அரசாண்ட நெடுமாறனாரது செந்தாமரை மலர்போன்ற பாதங்களை வணங்கி,
(அத்துணைகொண்டு); பன்மணிகள்...தொழுவாம் - பல மணிகளையும் அலைகளாலே
நீர்விளிம்பிற் பரப்புகின்ற நீண்ட கடற்கரையில் உள்ள தொன்மையாகிய மயிலாபுரியில்
வாழ்ந்த வாயிலார் நாயனாரது திருத்தொண்டின் தன்மையைத் தொழுது துதித்துச்
சொல்வோம்.
 
     (வி-ரை) இச்சரித முடிப்பும், மேல்வருஞ் சரிதந் தோற்றுவாயுமாகிய கவிக் கூற்று.