பக்கம் எண் :

பெரியபுராணம்393

     உணரும் ஒளிவிளக்குச் சுடர் - உணர்வு - ஞானம்; “ஒண்சுடர் ஞான
விளக்கினை யேற்றி” (தேவா); “அறிவா மொளிவிளக் கேற்றி; வகைநூல்.
 

     இறவாத ஆனந்தம் - ஏனைய ஆனந்த மெல்லாம் ஒருகாற் கெட்டொழிவனவும்
கேடுதருவனவுமாம்; சிவானுபவமாகிய ஆனந்தமொன்றே கெடாதது. இறவாத இன்ப
அன்பு வேண்டி.” (1776)
 

     அறவாணர் - சிவன்; அன்பே - அமுதமாகக் கொண்டு; “மெய்ததன்மை யன்பு
நுகர்ந் தருளுதற்கு” (3684) என்பன முதலியவை பார்க்க. “அன்பெனு மெய் யமிர்தம்”
- வகைநூல்.
 
     அர்ச்சனை செய்வார் - பூசிப்பாராய்; முற்றெச்சம்.
 

     அமைத்தல் - பாவித்தல்; அகப் பூசைக்குரிய மலர்களை வகைநூல் வகுத்தமை
காண்க.
     மறவாத வாய்மையால் - என்பதும் பாடம்.                             8
 

     4087. (வி-ரை) அகமலர்ந்த அர்ச்சனையில் - வழிபாடு - அகப்பூசை; நிகழவரும்
- விளங்க வருகின்ற;
 
     ஒழியாமே - நீங்காமல்; எப்போதும்.
 
     புகல் - புகுமிடமாக; தஞ்சமாக; நிலைபெற்ற இருப்பிடமாக. புகலமைத்து -
புகுதலைப் பொருந்தி;
 
     அடிநிழற்கீழ்த் தொழுதிருந்தார் - திருவடியில் சேர்ந்திருந்தார்;
திருவடிமறவாது இடையறாத சிவபோகத்தில் தொழுதிருத்தலே வீடுபேறாம்.
 

     9
 

4088. நீராருஞ் சடையாரை நீடுமன வாலயத்துள்
ஆராத வன்பினா லர்ச்சனைசெய் தடியவர்பாற்
பேராத நெறிபெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராருந் திருநீடூர் முனையடுவார் திறமுரைப்பாம்.                        10
 
     (இ-ள்) நீராரும்.....அர்ச்சனை செய்து - கங்கையாறு நிறைந்த சடையினை உடைய சிவபெருமானைத் தமது நீடும் மனக்கோயிலினுள் தாபித்து மிக்க அன்பினாலே பூசித்து; அடியவர்பால்.....போற்றி - அடியவர்களுடனிருந்து நீங்காத வீட்டு நெறியினைப் பெற்ற பெருந்தகையாராகிய வாயிலார் நாயனாரைத் துதித்து அத்துணையாலே; சீராரும்....உரைப்பாம் - சிறப்புப் பொருந்திய திருநீடூரில் வாழ்ந்த முனையடுவார் நாயனாரது திறத்தினைச் சொல்வோம்.
 
     (வி-ரை) சரித முடிபும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாகிய கவிக்கூற்று.
 
     மனவாலயத்து...அருச்சனைசெய்து - இந்நாயனார் செய்த அகப்பூசையின் சாரம்.
 
     அடியவர்பால்....நெறி - முன்னே வீடுபெற்ற அடியவர் கூட்டத்தினின்று நீங்காது உடனிருக்கும் பேறு.
 
     திரு நீடூர் முனையடுவார் - ஊரும் பெயரும் உரைத்துத் தோற்றுவாய் செய்தவாறு.
 
     சரிதச் சுருக்கம்: வாயிலார் நாயனார் புராணம் :- தொண்டை நாட்டில் திரு
மயிலாபுரிப்பதியில் வேளாளர் மரபில் வாயிலார் குடியில் தோன்றியவர் வாயிலார்
நாயனார்; அவர் இறைவருக்கு மனமாகிய கோயிலும், அறிவாகிய விளக்கும்,
ஆனந்தமாகிய திருமஞ்சனமும், அன்பாகிய திருவமுதும் அமைத்து நாடோறும்
வழுவாமே அகப்பூசை செய்வார். இவ்வாறு நெடுநாட் செய்திருந்து சிவனடி நிழலில்
அடியாருடனே இருக்கப் பெற்றனர்.