கொடுத்தனன் - என்று விளம்புவர் - என்று இயையும். இப்பாட்டுப் பூட்டுவிற் பொருள்கோள். விளம்புவர் என்றதற்கு எழுவாய் அறிந்தோர்கள் என்பது அவாய் நிலையான் வந்தது. அமருள் அழிந்தவர்க்காக - போர் வலியின்மையாற் றோல்வியுற்றவர்கள் பக்கம்; எளியார் பக்கம் சேர்ந்து உதவுதல் ஒரு தருமமாம்; கூலி ஏற்று - அதற்காகத் தமக்குக் கூலி நிதியம் பெற்று; எறிந்து - சென்று போர்செய்து; வென்றபெருஞ் செல்வம் - வெற்றி கொண்டு அதனால் வந்த பெரிய செல்வம்; வென்ற - வென்ற காரணத்தால் பெற்ற என்க; ஆறு சென்றவியர் - வந்த இளைப்பு - என்புழிப் போலக்கொள்க. இவ்வாறு கூலி ஏற்கும் செயலில் அக்கூலியே பெரிதென்று கொள்ளாமல் நடுவு நிலை வைத்து நீதி முறையினைத் தெரிந்தே அவர்பக்கம் ஏற்றனர் என்பது விரிநூலுட் காண்க. (4081); தமர் - அடியவர்கள்; தொழிலும் அடிமைப் பண்பும் பெயரும் வகைநூல் வகுத்தது. |
விரி :- 4089. (இ-ள்) மாறு.....திருநாட்டு - பகைமையை வென்று உலகினைக் காக்கும் சோழர்களது காவிரிபாயும் திருநாட்டில்; நாறு.....தேன் - கமழ்கின்ற மணமுடைய சோலைகளின் மலரரும்புகள் விரிந்து பொழிகின்ற செழுந்தேன்; ஆறு.......கமழும் - ஆற்றின் வழியே பெருக்கெடுத்து அவ்வெள்ளத்தினால் சேறு செய்த வயலினுள் உழவர்கள் உழுகின்ற சேறும் நறு மணம் கமழ்கின்ற; செல்வ நீடுர் திருநீடூர் - செல்வம் நீடியுள்ள ஊராகும் திருநீடூர் - என்பது. |
(வி-ரை) மண்காத்த - அரசாளும் எனத் தன்மை குறித்தது. மாறு - வேற்றரசரது பகை. |
செல்வம் நீடுஊர் திருநீடூர் - திருநடூர் என்ற பதியின் பெயர்ப்பொருள் விரிக்குமாற்றால் நகரச்சிறப்பும் உடன் கூறியவாறு; முன்னர்த் “திருவாமூர் திருவாமூர்” (1277), “கமழ்சாறூர் கஞ்சாறூர்” (866) என்பன முதலியவை போலக் காண்க. செல்வம் - என்றது இங்கு நீரின் வளத்தாற் சோலைகளின் செழிப்பும் வயல்களின் செழிப்பும் பிறவுமாகிய உலகவளம் பற்றிக் கூறப்பட்டது. |
ஆறுபெருகி - ஆறுபோலப் பெருகி; ஆற்று நீரினுள் சேர்ந்து பெருகி என்றலுமாம்; நனை - அரும்புகள். வாய்திறத்தல் - அலர்தல்; வாய்திறந்து பொழி செழுத்தேன் - தேன் பெய்து மூடிய குப்பிகளின் வாயினைத் திறந்து பொழிவது போல என்ற குறிப்பும் காண்க. நாறு விரை- விரைநாறும். |
அள்ளல் வயல் - சேற்றினையுடைய வயல்கள்; சேறு - சேறும் என்று இழிவு சிறப்பும்மை தொக்கது; எரு முதலிய பொருள்கள் தோய்ந்து அழுகுதலால் தீ நாற்றங் கமழவேண்டிய சேறும் அதற்கு மாறாகச் சோலைத் தேன்கலந்த நீர்பாய்வதனால் நறுவாசங் கமழ்கின்றது என்பதாம். செல்வம் நிறைந்த ஊரானது திருநீடூராம் என்க. |
வெள்ளமிகும் - நீர்வெள்ளம் பாய்ந்து தங்கும்; மள்ளர் - உழவர். 1 |
4090. | விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் டலைமைக் குடிமுதல்வர் களங்கொண் மிடற்றுக் கண்ணுதலார் கழலிற்செறிந்த காதன்மிகும் உளங்கொ டிருத்தொண் டுரிமையினி லுள்ளார்; நாள்ளார் முனையெறிந்த வளங்கொ டிறைவ ரடியார்க்கு மாறா தளிக்கும் வாய்மையார், 2 |
4091. | மாற்றார்க் கமரி லழிந்துள்ளோர் வந்து தம்பான் மாநிதியம் ஆற்றும் பரிசு பேசினா லதனை நடுவு நிலைவைத்துக் |