| கூற்று மொதுங்கு மாள்வினையாற் கூலி யேற்றுச் சென்றெறிந்து போற்றும் வென்றி கொண்டிசைந்த பொன்னுங்கொண்டு மன்னுவார் |
4092. | இன்ன வகையாற் பெற்றநிதி யெல்லா மீச னடியார்கள் சொன்ன சொன்ன படிநிரம்பக் கொடுத்துத் தூய போனகமுங் கன்ன னறுநெய் கறிதயிர்பால் கனியுள் ளுறுத்த கலந்தளித்து மன்னு மன்பி னெறிபிறழா வழித்தொண்டாற்றி வைகினார். 4 |
4090. (இ-ள்) விளங்ளகும்....முதல்வர் - விளக்கம் பொருந்தியம வள்ளற் றன்மை மிகுந்துள்ள வேளாளர் மரபில் தலைமையாகிய குடியில் முதல்வராய்; களங்கொள்.....உள்ளார் - விடத்தினைக் கொண்ட கழுத்தையுடைய கண்ணுதலாகிய சிவபெருமானது திருவடியிற் செறிவுடைய பெருவிருப்பம் மிகவும் மனத்துட் கொண்ட திருத்தொண்டுரிமை பூண்டுள்ளாராய்; நள்ளார்.....வாய்மையார் - நட்பில்லாதாரைப் போரில் வென்றதனால் வரும் வளங்களாகிய ஊதியத்தினைக்கொள்டு இறைவரைது அடியார்களுக்கு மாறாமல் அளிக்கும் வாய்மையினை யுடையவராய், 2 |
4091. (இ-ள்) மாற்றார்க்கு...பேசிகால் - (போரில்) பகைவர்களுக்குத் தோற்றவர்கள் வந்து தம்மிடம் பெருநிதியம் கொடுத்து தமது துணையைக் கொள்ளும்பரிசு பேசினால்; அதனை நடுவு நிலைவைத்து - அதனை நடுநிலையின் நின்று அறநெறியினை ஆய்ந்து துண்ந்; கூற்றும்...எறிந்து - இயமனும்அஞ்சி ஒதுங்கம் போர் முயற்சி யினாலே கூறிலினை ஏற்றுப் போய்ப் போர் வென்று; போற்றும்....மன்னுவார் - யாவரும் போற்றும் வெற்றியினை அடைந்து இசைந்த கூலியாகயி பொன்னையும் கொண்டு நிலைபெற வார்வாரராகி, 3 |
4092. (இ-ள்) இன்ன வகையால்.....கொடுத்து -இவ்வகையினாலே பெற்ற நிதிகள் எல்ாாவற்றையும் சிவனடியார்கள் சொன்ன சொன்னபடியே கொடுத்து; தூய...அறித்து - தூய்மையாகிய திருவமுதும் சர்க்கரை - நளுமணமுள்ள நெய் - கறி - தயிர் - பால் - கனி - என்றிவையுள்ளிட்டனவாகியவற்றையும் கலந்து திருவமுது அளித்தும்; மன்னும்.......வைகினார் - நிலைபெரும் அன்பின் நெறியிற் பிறழாத வழித்தொண்டினைச் செய்து வாழ்ந்தார். 4 |
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. |
4090. (வி-ரை) வண்மை மிக்குள்ள வேளாண் - “வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும், தாளாளர்” (தேவா - ஆக்கூர் - 3); வண்மை - வள்ளன்மை - ஈதை. இது வேளாளரின் சிறப்பியல்பு. |
வேளாண் தலைமைக்குடி - வேளாளமரபிலே பல குடிகளுள்ளும் தலைமை பெற்ற குடியில்; முதல்வர் - முதன்மை பெற்றவர்; நாண்டாண்மை என்பது வழக்கு. |
காதல்மிகும் உளங்கொள் திருத்தொண்டு-திருத்தொண்டு பெருவிருப்பத்தினை மனத்துக்கொண்டு செய்யத்தக்கது என்பதாம். |
திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் - திருத்தொண்டினைத் தமது உரிமையாகக் கொண்டவர். |
நள்ளார் முனை எறிந்த வளம் - நள்ளார் - பகைவர்; தம்மிடம் வந்து பரிசு வேண்டினோரின் பகைவர்; முனையயெரிதல் - போர் வெல்லுதல்; எறிந்த வளம் - எறிந்ததனால் பெற்றவளம்; கூலியாகிய நிதியம். |