பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்398

     மாறாது - பிறழாது எந்நாளும்.
 
     முதல்வர் -உள்ளார் - வாய்மையார் - மன்னுவால் (4091); கொடுத்து - அளித்து ஆற்றி - வைகினார் (4092) என்று இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிபு கொள்க.                                                         2
 
     4091. (வி-ரை) மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்....பேசினால் -
போலிரல் பகைவர்க்கு உடைந்து தோல்வுயுற்றவக்ள் தம்பால் வந்து தமது துணையை
வேண்டிய அதற்குக் கூலியாக மாநிதியம் தருவதாகப் பேசினால்; மாநிதியம் - “பெருஞ்
செல்வம்” வகைநூல்.
 
     நடுவுநிலை வைத்து - அறநெறியிற் சீர் தூக்கி; கூலிக்காகவே எதனையும்
இசைவது என்றில்லாமல் என்பதாம்.
 
     கூற்றும் ஒதுங்கும் ஆள்வினை - கூற்று; இயமன்; ஆள்வினை - முயற்றி;
இங்குப் போர்த்தொழில் குறித்தது. உம்மை உயர்வு சிறப்பு. “கூற்றொத்தீயே” (புறம்)
 
     கூற்றம் ஓதுங்கும் ஆள்வைனையாவது கூற்றுவான் எவ்வகை வலியாரையும்
உயிர்பிரித்தலில் வல்லவன். ஆனால் உரிய காலத்தாலன்றி அது செய்தல் இயலாது;
இவர் அவன் போலவே எவ்வகை வலியோரையும் உயிர் பிரித்தலில் வல்லவர்;
அதனுடைய எந்நாளிலும் அது செய்ய வல்லாந்தன்மையினை ஆள்வைனையாற்
பெற்றார்; இது கண்டு கூற்றகூனும் அஞ்சி ஒதுங்குவன் என்பதாம். “ஊழையு முப்பக்
கங் காண்ப ருலைவின்றித், தாழா துஞற்று பவர்” (கறள்).
 
     கூலி - என்பது தமது முயற்சிக்காகப் பெறும் ஊதியம் என்ற உணர் பொருளில்
வந்தது; எவ்வகை ஊதியமும் கூலியே என்னும் இது பொருளியல் நுல் உண்மைக்
கருத்து;
 
     எறிந்து - போர் வென்று; “கூலியேற்றெறிந்து” வகை நூலாட்சி.
 
     இசைந்த பொன் - கூலியாக இசைந்த நிதியம்; பொன் - அந்நாளில் வழங்கிய
பொன் நாணயத்தால் அளவிட்ட தொகை; மன்னுவார் - நிலைபெற்ற உலக வாழ்வினை
நடத்துவாராய்.                                                      3
 
     4092. (வி-ரை) சொன்ன சொன்னபடி - அவர்கள் திருவுளங்கொண்டு
விரும்பிக் கேட்டவாறே - ஒன்றம் குறையாமல் - அடுக்கு உறுதிப்பொருள் தந்து
நின்றது. கன்னல் - சர்க்கரை.
 
     கொடுத்து - அளித்துத் - தொண்டாற்றி - என்க. பொன்தருதல் ஈகை -
கொடையின் பாற்படுதலின் கொடுத்து என்றார்; அளித்து - அமுதூட்டி; இது அளி -
கருணையுடன் செய்யத்தக்கதாதலின் அளித்த என்றார்.
 
     அன்பின் நெறிபிறழா வழித்தொண்டு - பிறழாமை - வழுவாமை; வழி - வழி
வழி வருவது. பரம்பரை என்பர்.
 
     வைகினார் - வாழ்ந்தனர்.                                       4
 
4093. மற்றிந் நிலைமை பன்னனெடுநாள் வைய நிகழச் செய்துவழி
யுற்ற வன்பின் செந்நெறியா லுமையாள் கணவன் றிருவருளாற்
பெற்ற சிவலோ கத்தமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற வுழந்த முனையடுவா ரென்னு நாம முன்னுடையார்.              5
 
     (இ-ள்) மற்று.....நெறியால் - முன் கூறிய இந்த நிலையிலே திருத்தொண்டினைப்
பல நெடுங்காலம் உலகில் விளங்கும்படி செய்து வழிவழி வந்த அன்பினாலாகிய
செம்மை நெறியினாலே; உமையாள்.....மருவினார் - உமையம்மையாரின் கண