உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
சுந்தரமூர்த்தி நாயனார் துதி _ _ _ _ _ |
தொகை |
| “ஆருர னாரூரி லம்மானுக் காளே” | |
- திருத்தொண்டத் தொகை - 8 |
வகை |
| “கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரென்று புக்கொளியூர்த் தொடுத்தான் மதுர கவியவி நாசியை வேடர் சுற்றம் படுத்தான் றிருமுறு கன்பூண் டியினிற்ப ராபாத்தேன் மடுத்தா னவனென்பர் வன்றொண்ட னாகின்ற மாதவனே.” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - 63 |
விரி |
4095. | செறிவுண் டென்று திருத்தொண்டிற் சிந்தை செல்லும் பயனுக்கும் குறியுண் டொன்று கிலுங்குறைவொன் றில்லோ நிறையுங் கருனையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்கப் பறியுண் டவரெம் பழவினைவோர் பறிப்பா ரென்னும் பற்றாலே. 7 |
தொகை: ஆரூரனாகிய யான் திருவாரூரில் அம்மானுக்கு ஆளானேன். |
வகை: அன்று....அவிநாசியை - முன்னாளில் புக்கொளியூரில் எழுந்தருளிய அவிநாசியாகிய இறைவரை மதுரம் பொருந்திய பாடல் தொடுத்தார்; (அதனால்); கொடுத்தான்.....உயிர் - முதலையினாற் கொள்ளப்பட்ட பிள்ளைக்கு உயிர் கொடுத்து மீளவரச் செய்தார்; வேடர்....திருமுருகன் பூண்டினியில் - திருமுருகன் பூண்டினியில் வேடர்களாகிய கணங்களாற் சூழப்பட்டுப் பறிபடுத்தார்; பராபரத் தேன்மடுத்தானவன் - பராபரனாகிய தேனை வாய்மடுத்து உண்டவர்; வன்றொண்டனாகின்ற மாதவனே என்பர் - வன்றொண்டன் என்னும் மாதவரே யாவர் என்று அறிஞர் கூறுவர். இப்பாட்டுக் கொண்டு கூட்டுப் பொருள்கோள். புக்கொளியூர் - ஊர்ப் பெயர்; அவிநாசி - அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவர் பெயர்; “புக்கொளியூ ரவிநாசியே” (தேவா); மதுரகவி - தேவாரப்பதிகம்; தொடுத்தானாதலின் அத்துணைகொண்டு உயிர் கொடுத்தான் என்க. “முன்னாள் நாவலர் பெருமான், பண் |