பக்கம் எண் :

பெரியபுராணம்401

டொரு முதலை யுண்டமைந் தனை வர, வழைத்தன னென்றாய் பிழைப்பில ததூஉம்,
தந்திட வேண்டு மென்றன ரன்றே” (சங்கற்ப நிராகரணம் - சிவசமவாதி நிராகரணம்);
வேடர் சுற்றம் படுத்தான் - பறியுண்டார்; பராபரத்தேன் படுத்தாள் -
திருமுருகன்பூண்டித் திருப்பதிகத்தினிற் றோழமைத் திறத்தால் இறைவரை அனுபவித்த
சுவை குறித்தது.
 

     விரி: 4095. (இ-ள்) நிறையும் கருணையினால் - நிறையும் அருட்பெருக்கினாலே;
வெறியுண்...பறியுண்டவர் - மணமுடைய சோலை சூழ்ந்த திருமுருகன் பூண்டியின்
வழியிலே வேடர்களாற் பறிக்கப்பட்ட நம்பியாரூரர்; எம் பழ....பற்றாலே - எமது
பழவினை மூலத்தை அடியோடு பறித்து விடுவர் என்ற ஆசாவினாலே;
செறிவுண்டென்று......குறிப்புண்டு - செறிதல் உளதாகு மென்று திருத்தொண்டிலே மனம்
செல்கின்ற பயனுக்கும் ஒரு குறியுண்டு; (அஃதன்றியும்) ஒன்றாகிலும்.....ஒன்றில்லோம் -
ஒன்றானும் குறைவு சிறிதும் இல்லோம்.
 
     (வி-ரை) செறிவு - மிக்க பயன்; பயனுக்குங் குறியுண்டு - பயன்
பெறுநிலைக்கும் குறிக்கோளாகும்....பயன் பெரும் குறிக்கோள்.
 
     ஓன்றாகிலும் குறைவு ஒன்று இல்லோம் - அதுவேயுமன்றி ஒன்றினாலும் ஒரு
சிறிதும் குறையில்லோம்; ஒன்று - ஒரு சிறிது என்று அளவு குறித்தது; “எற்றாலுங்
குறைவில்லை யென்பர்கரனெஞ்சமே” (நம்பி - கோயில்).
 
     பற்றாலே - இத்துணிவுகளிரண்டும் ஆளுடைய நம்பிகளது திருவடிப் பற்றினாலே
ஆவன; பற்று - ஆதரவு - அன்பு என்றலுமாம்.
 
     பறியுண்டவர் பறிப்பார் - தாம் பறியுண்டு பழகியவர் அப்பழக்கத்தாற் பிறரைப்
பறியுண்ண வைத்தல் எளிது என்ற குறிப்பு. வேடர் பறித்த வரலாறு வகைநூலும்
இங்குக் குறித்தது.
 
     பழவினை - மூலகன்மம்; வேர் - முதல்; அதற்குக் காரணமான வாசனாமலம்.
 
     கருணையினால் - பறிப்பர் என இயையும்; கருணையினால் - பறியுண்டவர்
என்று கூட்டி, பறியுண்டமையும் சிவனருளாலாகிய என்றுரைக்கவும் நின்றது.
 
     பழவினை வேர் பறிப்பர் - நம்பிகளை வழிபட்டால் பிறவியற்று வீடுபேறு
பெறலாம் என்பது.                                                    7
 
     சரிதச்சுருக்கம்: முனையடுவார் நாயனார் புராணம் :- சோழநாட்டில் வளமிக்க
திருநீடுரில் வேளாளர் மரபில்ர உயர்ந்த குடியில் ஒரு பெரியார் தோன்றினர்.
மாற்றார்க் கழிந்தவர் வந்து தமது துணையை வேண்டினால் அதனை நடுநிலைவைத்துக்
கூலி ஏற்றுச் சென்று அவர் வெற்றியும் பொன்னுங் கொண்டு வருவதில் வல்லவர்.
ஆதலின் அவருக்கு முனையடுவார் என்னும் திருநாமம் வழங்கலாயிற்று.
 
     அவர் சிவபெருமான்பால் பேரன்புடையவர்; போர்முனை யெறிந்து பெற்ற
நிதியெல்லாம் சிவனடியார்களைக் திருவமுதூட்டினர். இவ்வாறு பன்னாள் தொண்டு
செய்திருந்து சிவலோகத்திற் சேர்ந்து பிரியா உரிமை யடைந்தனர்.
     கற்பனை (1) கூலி பேசிப் பெற்று மாற்றார் போரின்மேற் செல்லுதலையும்
நடுநிலைவைத்து ஆய்ந்து செய்தல் நிதியாகும்.
 
     (2) முனையெறிந்த கூலிகொண்டும் சிவதருமங்கள் செய்தல் சிறப்புடையது.
 
     (3) அடியார் வேண்டியபடி கொடுத்தலும் விதிப்படி நல்ல திருவமுதூட்டலும்
சிவதருமங்களாம்.