பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்402

     (4) வேளாளர்கள் போர் உரிமையும் வன்மையும் உடையவர்.
 

     தலவிசேடம்: திருநீடுர் - சோழநாட்டுக் காவிரி வடகரை 21 - வது பதி;
வருளாரணியம் - மகிழவனம் எனப்படும். ஊழியிலும் அழியாது நீடியிருத்தலின்
இப்பெய ரெய்தியது; இந்திரன், சூரியன், சந்திரன், பாதகத்தால் நண்டுருவடைந்த தன்ம
சுதன் என்னும் வேதியன், ஆலால சுந்தரி (காளி) இவர்கள் பூசித்துப் பேறு பெற்றது;
ஆளுடைய நம்பிகள் இங்குப் பணியாது செல்லும்போது திருவருளால் மீண்டுவந்து;
“நீடூர் பணியா விடலாமே” என்ற பதிகம் பாடி வணங்கியது; சுவாமி மிகச் சிவந்த
சோதிலிங்கத் திருமேனி; முனையடுவார் நாயனாரது தலம் - சுவாமி - அருட்
சோமநாதர் - கானதீர்த்த சங்கரர்
; அம்மை - வேயுறு தோளி யம்மை;
அதிகாந்தியம்மை
- தீர்த்தங்கள் சந்திரபுட்கரணி முதலிய ஒன்பது உண்டு. மரம் -
மகிழ்; பதிகம் திருப்புன்கூறும் திருநீடூரும் என்ற பதிகம் 1.
 
     இது நீடூர் நிலயத்தினின்றும் வடமேற்கே மட்சாலை வழி ஒருநாழிகை யளவில்
அடையத்தக்கது; மகமதியர்கள் அதிகமாகக் குடியேறியுள்ளார்.
 

முனையடுவார் நாயனார் புராணம் முற்றும்.
 

கறைக்கணடன் சருக்கம் முடிந்தது.