உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
53. கழற்சிங்க நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்” 7 | |
வகை |
| “மாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை யரியப்பொற்கை காதிவைத் தன்றோ வரிவதென் றாங்கவள் கைதடிந்தாள் நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங் கோதைக் கழற்சிங்கனே” 8 | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - 64 |
விரி |
4096. | படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார் கடிமதின் மூன்றுஞ் செற்ற கங்கைவார் சடையார் செய்ய அடிமல ரன்றி வேறொன் றறிவினிற் குறியா நீர்மைக் கொடிநெடுங் தானை மன்னர் கோக்கழற் சிங்க ரென்பார். 1 |
புராணம்: முன் உரைத்தாங் குரைத்துக் கொள்க. |
தொகை: கடலாற் சூழப்பட்ட உலகத்தை யெல்லாம் அரசு புரிந்து காக்கின்ற பேரரசராகிய காடவர் மரபில் வந்த அரசராகிய கழற்சிங்கரது அடியவர்க்கும் யான் அடியேனாவேன். |
காக்கின்ற என்று நிகழ்காலத்தில் கூறியமையால் ஆளுடைய நம்பிகள் காலத்தில் இவ்வரசர் அரசாட்சி புரிந்தனர் என்பது கருத்தப்படும்.1 |
காடவர்கோன் - காடவர் மரபில் வந்தவர்; “பல்லவர் குலம்” (4096); பல்லவர் மரபும் காடவர் மரபும் ஒன்று. |
கழற்சிங்கன் இவர்க்கு மற்றும் பல பெயர்கள் வழங்கியன என்பர். |
_____________ |
1 குறிப்பு: இவர் மூன்றாவது நந்திவர்மன் என்ற பெயரால் கல்வெட்டு முதலிய ஆதரவுகளிற் காணப்படும் அரசராக இருக்கலாம் என்றும், இங்கு இப்புராணத்துள் வரும் அவரது பட்டத்து அரசி, சங்கா என்னும் சமணச் சார்புடைய பெண்மணி என்றும் சரித ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். |