பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்408

     4099. (வி-ரை) அரசியல் ஆயம் - அரசுரிமைச் சுற்றத்தார்; ஐவகை குழுக்கள்;
மந்திரியர் - புரோகிதர் - சேனாபதியர் - தூதர் - சாரணர் என்போர்.
 
     அங்கணர் - புற்றிடங்கொண்ட பெருமான்; அவரது திருக்கோயிலென்று
கோயிலினைக் குறிக்கவந்த அடைமொழி, அரசர் வணங்கிய பெருமானையும் குறித்தது;
 
     முதல்வர் - புற்றிடங்கொண்டார்; வணங்கும்போதில் - வணங்கிக்
கொண்டிருக்கும் சமயத்தில்;
 
     உரிமை மெல்லியலார் - உரிமை மனைவியர்கள்;
 
     உரை.......தேவி - புகழ்சிறந்த பட்டத்தரசி; அரசர்க்கு மனைவியர் பலர்
இருந்தனர்; அவருள்ளே முதல்மனைவியாரே பட்டத்தரசியாவ ராதலின் அத்தேவி1.
உரை
- புகழ்; இவரது தயை முதலிய நற்குணங்களைக் குறித்தது.              4
                       
 
     4100. (வி-ரை) அங்கட் குலவிய பெருமை எல்லாம் தனித்தனி கண்டு
வந்து
- கோயிலை வெளிச் சுற்றிலே வலங்கொண்டு அங்கு உள்ள தனிக்
கோயில்களையும், சிற்ப முதலிய அழகுகளையும் தனித்தனி பார்த்தனர் என்க.
 
     பள்ளித்தாமம் தொடுக்கும் மண்டபம் - பூமண்டபம்; இது பூங்கோயிலின்
தென்கீழ்ப் பாங்கு திருவாரூ ரரநெறித் திருக்கோயிலினுள் உள்ள மண்டபம் என்பது
வழிவழிக் கேள்வியாற் பெறப்பட்ட செய்தி;
 
     ஓர் புதுப்பூ அங்கு விழந்தது ஒன்று - ஓர் - என்பது வகையினையும், ஒன்று
என்பது தொகையினையும், புதுப்பூ என்றது அது இறைவருக்கு ஏற்பிக்க உள்ளது என்ற
செய்தியினையும், பண்பையும் உணர்த்தின. “ஆரூர் மணிக்கு வைத்த போது” என்பது
வகைநூல்; விழுந்தது - பூமண்டபத்தினுள் விழுந்த மலர்களும் எடுத்துச் சாத்தும்
விதியுடையன.
 
     எடுத்து மோந்தாள் - மோந்தாள் என்றலே அமையுமாயினும், எடுத்தல் ஒன்றும்
மோத்தல் ஒன்றுமாக இரு வேறு பிரித்துக் கூறினது, பின்னர்ச் சரிதத்தின் இரு வேறு
நிகழ்ச்சிகளின் குறிப்புத்தருதற்கு;
 
     சாயல் மா மயிலே போல்வாள் - சாயல் - மென்மை, வடிவம் என்றலுமாம்.
இவ்வம்மை மிக்க அழகுடையவர் என்பது கல்வெட் டாராய்ச்சியாற் கண்டதென்ப;
மேலும் “தோகை மயிலேன” (4102) “பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று” (4103)
என்றுரைத்தல் காண்க. உருவுவமம்.                                  5        
   
 
4101. புதுமலர் மோந்த போதிற் செருத்துணைப் புனிதத் தொண்டர்
“இதுமலர் திருமுற் றத்து ளெடுத்துமோந் தனளா” மென்று
கதுமென வோடிச் சென்று கருவிகைக் கொண்டு பற்றி
மதுமலர்த் திருவொப் பாடன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.         6
 

_____________________

1      குறிப்பு ;- இவள் பெயர் சங்கா; இவள் மிக்க அழகு வாய்ந்தவள்; குடிகட்குத்
தாய்போன்றவள்; அரசனது பாக்கியமே உருவெடுத்தாற் போன்றவள்; சிறந்த சமண
பக்தனான இரட்டப் பேரரசனான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகள்;
பட்டத்தரசியாதலின் கணவருடன் சிவதலங்கட்குச் சென்றாள்;
 
     இவள் சமணச் சார்புடையவளாதலின், சிவனை வணங்குதலில் ஈடுபடாது
கோயிலழகில் ஈடுபட்டு அழகு காணச் சென்றனள்; இவளை மணந்தது அரசியல்
தந்திரம்; என்பனவாதி செய்திகள் சரித ஆராய்ச்சியாளர் கூறுப.