பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்410

     அணைய - அவ்விடத்திற்சார; புற்றிடங்கொண்டாரைக் கும்பிட்டு மீளவும் வலம் வரும் அணிமையில் உள்ளது திரு அரநெறிப் பூமண்டபம். 7
 
4103. வந்தணை வுற்ற மன்னர் மலர்ந்தகற் பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று பார்மிசை வீழ்ந்த தென்ன
நொந்தழிந் தரற்று வாளை நோக்கி “யிவ் வண்டத் துள்ளோர்
இந்தவெவ் வினையஞ் சாதே யார்செய்தா?” ரென்னு மெல்லை,         8
 
4104. அந்நிலை யணைய வந்து செருத்துணை யாரா மன்பர்
முன்னுறு நிலைமை யங்குப் புகுந்தது மொழிந்த போது,
மன்னரு மவரை நோக்கி “மற்றிதற் குற்ற தண்டந்
தன்னையவ் வடைவே யன்றோ தடிந்திடத் தகுவ” தென்று,            9
 
4105.     கட்டிய வுடைவா டன்னை யுருவி “யக் கமழ்வா சப்பூத்
தொட்டுமுன் னெடுத்த கையாம் முற்படத் துனிப்ப” தென்று
பட்டமு மணிந்து காதல்பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தா ரன்றே.         10
 
     4103. (இ-ள்) வந்தணைவுற்ற மன்னர் - வந்து சேர்ந்த மன்னவர்;
மலர்ந்த.......என்ன - மலர்கள் விரிந்த கற்பகத்தின் மணமுடைய பசிய தளிர்களைக்
கொண்ட பூங்கொம்பு ஒன்று நிலத்தின்மேல் விழுந்ததுபோல; நொந்து......நோக்கி -
வருந்தி அழிந்து அரற்றுவாளாகிய தேவியை நோக்கி; இவ்.......எல்லை - இந்தப் பூவுலக
அண்டத்தில் உள்ளவர்களுள் இக்கொடிய செயலை அச்சமில்லாது செய்தவர் யாவர்?
என்று கேட்டபோது,                                                  8
 
     4104. (இ-ள்) அந்நிலை....போது - அந்நிலையில் பக்கத்தில் வந்து
செருத்துணையாராகிய அன்பர் முன்னர்ப் பொருந்திய நிலைமையினை அங்கு
நிகழ்ந்தவாறு சொல்லியபோது; மன்னரும் அவரை நோக்கி - அரசரும் அவ்வன்பரை
நோக்கி; மற்றிதற்கு....என்று - மற்று இச் செயல்களுக்குப் பொருந்திய தண்டனையை
அக் குற்றங்கள் புகுந்த அடைவுப்படி யன்றோ தடியத் தக்கது என்று கூறி,       9
    
     4105. (இ-ள்) கட்டிய.....உருவி - தமது இடுப்பிற் கட்டிய உடைவாளை உருவி;
அக்....என்று - அந்த மணங்கமழ் பூவினைத் தொட்டு முன்னர் எடுத்த கைதான்
முன்னர்த் துணிக்கப்படுவது தகுதி என்று சொல்லி; பட்டமும்....அன்றே - தமது
அரசுரிமைப் பட்டமும்பூண்டு தமது காதலையும் பூண்டு பயில்கின்ற பெருந்தேவியாகிய
மணம்விரியும் கூந்தலையுடைய அவளது செங்கையினை அணிந்த வளையலோடும்
அப்பொழுதே துணித்தனர்.                                             10
 
     இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4103. (வி-ரை) மலர்ந்த....வீழ்ந்ததென்ன - வீழ்ந்து அரற்றும் தேவிக்கு
உருவுவமை; இது அரசர் கண்ட நிலைபற்றியது. வீழ்ந்தரற்றும் அந்நிலையின் உவமை.
ஈண்டு அயர்ந்து கிடத்தலின் “கொம்பு” என்றார். அழகின் மேம்பாடும் உடன்
குறித்தது. அழிந்து - செயலழிந்து. அரற்றுதல் - புலம்புதல்.
 
     இவ்வண்டத்துள்ளோர்....என்னும் எல்லை - இந்நிலவுலகத் துள்ளோர் எவரும்
இதனைச் செய்யத் துணியமாட்டார்கள்; வேறு அண்டத்தவர் தாம் வந்து செய்திருத்தல்
வேண்டும் எனத் தமது வலிமையும் வீரமும் தோன்ற முழக்கியது; “வென்றவ ரியாவ
ரென்றான் வெடிபட முழங்குஞ் சொல்லான்” (585) என்றநிலை இங்கு
நினைவுகூர்தற்பாலது; எல்லை - அப்போது.                              8