பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்414


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

54. இடங்கழி நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“மடல்சூழ்ந்த தார்நம்பி யீடங்கழிக்குத், “தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கும்’ அடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (9)
 

வகை
 

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்
“றிங்கட் சடையர் தமரதென் செல்வ” மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே ளிர்மன் னிடங்கழியே”

- திருத்தொண்டர் திருவந்தாதி (65)
 

விரி
 

4109. எழுந்திரைமா கடலாடை யிருநிலமா மகண்மார்பில்
அழுந்துபட வெழுதுமிலைத் தொழிற்றொய்யி லணியினவாஞ்
செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு குயினாடுங் கோனோடு.                1
 
     புராணம் : முன் உரைத்தாங் குரைத்துக் கொள்க.
 
     தொகை : இதழ்களையுடைய மலர்மாலையணிந்த பெருமையுடைய இடங்கழி
நாயனாருக்கும் (தஞ்சைச் செருத்துணையாரடியார்க்கும்) நான் அடியேன்.
 
     தார் - சோழ அரசர்க்குரிய மாலை; மடல் - இதழ்; இங்கு இதழ்களையுடைய
மலர்களுக்காகிவந்தது. நம்பி - ஆண்மக்களுட் சிறந்ததோர்.
 
     வகை : சிங்கத்துருவனை......முகடு - நரசிங்க உருவெடுத்த திருமாலின்
அகந்தையைப் போக்கிய இறைவரது பொன்னம்பலத்தின் முகட்டினை; கொங்கிற்
கனகம்.....குல முதலோன் - கொங்கிற் பொன்னினால் வேய்ந்து அணிசெய்த ஆதித்தச்
சோழரது வழிவழி முதல்வர்; திங்கட்கடையார்.....இறைவன் - என் செல்வம் சந்திரனை
அணிந்த சடையினை உடைய இறைவரது அடியார்களுடையதே என்று
பறைசாற்றுவித்தவராகிய எம்தலைவர்; இருக்குவேளிர்மன் இடங்கழியே - நிலைபெற்ற
வேளிர் குலத்தில் வந்த அரசர் இடங்கழியா ரென்பவரேயாம்.
 
     சிங்கத்து உருவன் - நரசிங்க உருவெடுத்த திருமால்; செறுதல் - ஈண்டுச்
செருக்கடக்குதல் என்ற பொருளில் வந்தது.