பக்கம் எண் :

பெரியபுராணம்415

     சிற்றம்பல முகடு - திருச்சிற்றம்பலத்தின் முகட்டினை; கொங்கிற் கனகம்
அணிந்த
- “பாக்கொங்கிற் பன்னுதுலைப் பசும் பொன்னாற் பயில்பிழம்பர்
மிசையணிந்த” என்பது விரிநூல்; கொங்கு - கொங்குநாடு; இங்குக் காவிரி
வெளிப்பட்டுப் பெருகும் நிலப்பரப்புப் பொன்மணல் மிகுந்துள்ளது. (Kolar gold
fields; Coorg).
இப் பொன்மணற் சன்னங்களைக் கொழித்துவருதலாற் காவிரியாறு
பொன்னி எனப்படும்.
 

     ஆதித்தன் - ஆதித்தச் சோழர்; திங்கட் சடையர்.......செல்வம் எனப்
பறைபோக்கு
- இவர் சரித வரலாறு. விரிநூலுள் (411) இதனை விரித்தல் காண்க.
 
     இருக்கு(ம்) வேளிர் - நிலைபெற்ற வேளில் குலம். “அந்நகரத் தினிலிருக்கு
வேளிர் குலத் தரசளித்து” (4111); பிரதிகளிற் கண்ட இருக்குவேளூர் என்ற பாடம்
தவறு; அந்தப் பாடத்தினையே கொண்டு, இதற்கும், இவரது நகரம் கொடும்பாளூர்
(4410) என்று ஆசிரியர் கூறுதலுக்கும் மாறுபாடு கண்டு, அருளின் வழியே வந்த
வழிநூலும் சார்புநூலும் தம்முள் முரணுவன என்று கூறி, அபசாரப்படும் நவீன
ஆராய்ச்சியாளருமுளர், திரு அருள் புலப்படுத்துப் போந்த எந்தம் பெருமக்களின்
திருவாக்குக்களுள் யாண்டும் முரண்பாடு இராது என்பதை நாம் மனத்துள் அழுந்த
வைக்கவேண்டும். முரணுவனவாகக் காணில் ஒற்றுமை காண வியலாத எமது
அறிவுக்குறையே காரணமென் றஞ்சுதலும் வேண்டும். இதுவே எந்தம்
பேரருளாளர்களது நூல்களுக்கும் பிறநூல்களுக்கும் உள்ள வேறுபாடென்க. மன் -
அரசர்; இவரைச் சோழர் மரபிலிருந்து கிளைத்துப் பிறிதோர் சார்பாக மேற்கொண்டு
அரசாண்டமையின் முடிமன்னருட் சார்த்தி வகுத்து ஓதுவர் திருத்தொண்டர் புராண
வரலாறுடையார். இருக்கு வேளிர்குலம் அவ் வாறாயதொரு சிறுமரபு என்க. (வேளிர்
- குறுநில மன்னர்)
 
     விரி: 4109. (இ-ள்) எழுந்திரை.....மார்பில் - மேன்மேல் எழுந்து வருகின்ற
அலைகளையுடைய பெருங்கடலினை ஆடையாகவுடைய பெரிய நிலமாகிய
மகளின்மார்பில்; அழுந்துபட....அணியினவாம் - அழுந்தும்படி எழுதுகின்ற இலைகள்
போலச் சித்திரிக்கப்பட்ட தொய்யிலின் அணியினைக் கொண்டுள்ளன;
செழுந்தளிரின்.....கோனாடு - செழிய தளிர்களின் பக்கத்தில் மறைந்த பெடை
மகிழும்படி தேமாவின் றளிர்களைக் கோதிக்கொண்டு குயில்கள் நாடுகின்ற கோனாடு
என்பது.
 
     (வி-ரை) கோனோடு - தொய்யிலணியினவாம் என்று இயையும்; ஒருமைப்
பன்மைமயக்கம். நாட்டின் இடங்கள் அணியின என்றலுமாம்.
 
     அழுந்துபட - அழுந்த; ஒரு சொல். எழும்திரை - உயரும் அலைகளையுடைய;
மா - கரிய என்றலுமாம்.
 
     எழுதும் இலைத் தொழில் தொய்யில் - சந்தனக் குழம்பினால் பெண்களின்
மார்பில் இலை பூ முதலிய வடிவங்களாய்ச் சித்திரித்து எழுதும் அணி விசேடம்
தொய்யில் எனப்படும்.
 
     கடலாடை - நிலமகள் - உருவகம்.
 
     தேமாவின் துணர்ச் சோலைகள் சூழ்ந்து இருத்தலின் நிலமகள் மார்பில் இலைத்
தொழில்பட எழுதும் தொய்யில் போன்றது இந்நாடு என்பதாம்.
 
     தேமாவின் கொழுந்துணர் கோதி - குயில்கள் மாவின் இளந்தளிர்களைக்
கோதிக் களிக்கு மியல்பின; “பானுறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி, யேனோர்க்கு
மினிதாக மொழியுமெழி லிளங்குருகே” [பிள் - பழந்தக்க -