தோணிபுரம் - 8]. துணர் - பூ என்றலுமாம்; “பானாறு மலர்ச்சூதப் பல்லவங்களவை கோதி......மொழியுமெழி லிளங்குயிலே” (பிள் - தேவா - தோணிபுரம் ). |
மறைந்த பெடை களிப்பக் குயில் நாடும் என்று கூட்டுக; மறைந்த பெட்டையைக் காணாது குயில் தேட அதுகண்டு பெடை, களிக்கின்றது; சிறுவர் காதலர் விளையாட்டு வகைக் குறிப்பு. துணர் கோதிக் கொண்டு - என்பது தேடுதற்குத் தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டு என்ற குறிப்பு. குயில் - ஆண் குயில்கள்; |
கோனாடு - இது புதுக்கோட்டையின் ஒரு பகுதி. |
பெடைக்களிக்க - என்பதும் பாடம். 1 |
4110. | முருகுறுசெங் கமலமது மலர்துதைந்த மொய்யளிகள் பருகுறுதெண் டிரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி வருகுறுதண் டுளிவாடை மறையமா தவிச்சூழல். குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர். 2 |
(இ-ள்) முருகுறு........வாவி - மணங்கமலும் செந்தாமரைத் தேனை மலரில் மொய்த்த வண்டுகள் பருகுதற்கிடமாகிய தெளிந்த அலைகளையுடைய வாவியில்; பயில் பெடையோடு......மறைய - பொருந்திய பெண்பறவைகளோடு இறையினை உண்டு, மோதிவரும் குளிர்ந்த வாடைக்காக மறைந்துறையும்படி; மாதவிச் சூழல் குருகு உறங்கும் - குருக்கத்திச் சோலையில் குருகுகள் உறங்குகின்ற; கோனாட்டுக் கொடி நகரம் கொடும்பாளூர் - கோனாட்டிலே கொடி நகரம் கொடும்பாளூர் என்ப தாகும். |
(வி-ரை) நாட்டுவளமும் நகரச்சிறப்புங் குறித்தது இப்பாட்டு. தாமரை மலர்களின் தேனை வண்டுகள் உண்கின்றன; அத் தடாகங்களில் குருகுகள் ஆணும் பெண்ணுமாகக் கூடி இரையருந்தி வாடைக் கொதுங்கித் குருக்கத்திச் சோலையில் உறங்குகின்றன; இவ்வாறு தடாகங்களும் சோலைகளும் சூழ வுள்ளது கோனாட்டின் கொடும்பாளூர் - என்பதாம். அளிகள் கமலமது பருகுதல் இச்சரிதக் குறிப்பு. |
கொடிநகரம் - தலைநகரம்; இராசதானி. மாதவி - முல்லை விசேடமுமாம். |
கொடும்பாளூர் - இது தலை நகரத்தின் பெயர். |
மது - பருகுறும் - வாவி(யில்) என்க. |
செங்கமல மலர்மகரந்த - பெருகுறு தெண் - என்பனவும் பாடங்கள். 2 |
4111. | அந்நகரத் தினிலிருக்கு வேளிர்குலத் தரசளித்து மன்னியபொன் னம்பலத்து பமனிமுகட்டிற் பாக்கொங்கின் பன்னுதுலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பா மிசையணிந்த பொன்னெடுந்தோ ளாதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர், 3 |
4112. | இடங்கழியா ரெனவுலகி லேறுபெரு நாமத்தார் அடங்கலர்முப் புரமெரித்தா ரடித்தொண்டி னெறியன்றி முடங்குநெறி கனவினிலு முன்னாதா ரெந்நாளுந் தொடர்ந்தபெருங் காதலினாற் றொண்டர்வேண் டியசெய்வார், 4 |
4113. | சைவநெறி வைதிகத்தின் றருமநெறி யொடுந்தழைப்ப மைவளருந் திருமிடற்றார் மன்னியகோ யில்களெங்கும் |