பக்கம் எண் :

பெரியபுராணம்417

  மெய்வழிபாட் டர்ச்சனைகள் விதிவழிமேன் மேல்விளங்க
மொய்வளர்வண் புகழ்பெருக முறைபுரியு மந்நாளில்,              5
 
4114. சங்கரன்ற னடியாருக் கமுதளிக்குந் தவமுடையார்
அங்கொருவ ரடியவருக் கமுதொருநா ளாக்கவுடல்
எங்குமொரு செயல்காணா தெய்தியசெய் தொழில்முட்டப்
பொங்கியெழும் பெருவிருப்பாற் புரியும்வினை தெரியாது.          6
 

4115.

அரசரவர் பண்டாரத் தந்நாட்டி னெற்கூட்டின்
நிரைசெறிந்த புரிபலவா நிலைக்கொட்ட காரத்தின்
புரைசெறிநள் ளிருளின்கட் புக்குமுகந் தெடுப்பவரை
முரசெறிகா வலர்கண்டு பிடித்தரசன் முன்கொணர்ந்தார்.           7
 
     4111. (இ-ள்) அந்நகரத்தினில்...அரசளித்து - அந்த நகரத்திலே இருக்குவேளிர்
குலத்தில் தோன்றி அரசு செய்து; மன்னிய.....அணிந்த -நிலைபெற்ற பொன்னம்பலத்தின்
அழகிய முகட்டிலே ஒளியுடைய கொங்குநாட்டின் புகழுடைய எடையேறப் பெற்ற
பசும்பொன்னினாலே விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து அணிந்த;
பொன்.......குடிமுதலோர் - பொன்னணிகள் பூண்ட தோளையுடைய ஆதித்தச் சோழனது
புகழ்தங்கிய மரபில் குடிமுதல்வராய்,

3

     4112. (இ-ள்) இடங்கழியார்....நாமத்தார் - இடங்கழியார் என்று உலகத்தில்
புகழ்பெற்ற பெரிய பெயரினையுடையவர்; அடங்கலர் .....முன்னாதார் -
பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த சிவபெருமானது திருவடித் தொண்டின்
நெறியினையேயன்றி ஏனை முடக்கம் பொருந்திய புறநெறிகளைக் கனாவிலும்
நினைக்காதவர்; எந்நாளும்.......செய்வார் - எக்காலத்திலும் தொடர்ந்த பெரிய
காதலினாலே தொண்டர்கள் வேண்டிய பணிகள் எல்லாவற்றையும் செய்வாராகி,
 

4

    4113. (இ-ள்) சைவநெறி.....தழைப்ப - சைவநெறியானது வைதிக தரும நெறியுடனே
தழைக்க; மைவளரும்....விளங்க - விடத்தினைக் கொண்ட திருமிடற்றினையுடைய
இறைவர் நிலைபெற வீற்றிருக்கும் திருக்கோயில்களிலெங்கும் உண்மை வழிபாடாக
அர்ச்சனைகள் சிவாகம விதிவழியே மேன்மேல் விளங்க; மொய்...புகழ் பெருக -
கூடிவளர்கின்ற வளப்பமுடைய புகழ் பெருக; முறைபுரியும் அந்நாளில் - அரசு
செலுத்தும் நாளிலே.

5

     4114. (இ-ள்) சங்கரன்.......அங்கொருவர் - அங்குச் சங்கரரது அடிய வர்க்கு
அமுது அளிக்கும் தவத்தினையுடையார் ஒருவர்; அடியவருக்கு.....முட்ட - ஒருநாள்
அடியவருக்குத் திருவமுதாக்குதற்குரிய பண்டங்கள் பெற எங்கும் ஒரு செயல்
காணாமையால் தாம் செய்துவந்த பொருந்திய அத்தொழில் முட்டுப்பட;
பொங்கி....தெரியாது - மேன்மேலும் பொங்கி எழுகின்ற பெரிய விருப்பத்தினாலே தாம்
செய்யும் செயல் தெரியாது.                                               6
 
     4115. (இ-ள்) அரசரவர் பண்டாரத்தில் - இடங்கழியாராகிய அரசரது
பொக்கிசத்திலே; அந்நாட்டின்.......எடுப்பவரை - அந்நாட்டின் நெற்கூடுகளின் வரிசை
நிறைந்த மதிற் காவல் பலவுள்ள நிலைக்கொட்டகாரத்தில் எங்கும் மிகுந்து இருள்
நிறைந்த பாதி இரவிலே புகுந்து நெல்லினை முகந்து எடுக்க அவரை; முர