செறி.....முன்கொணர்ந்தார் - கடிகைப்படி இரவுமுழுதும் காவல் முரசு முழக்கம் காவலர்கள் கண்டு அவரைப்பற்றி அரசன் முன்னே கொண்டுவந்தனர். 7 |
இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4111. (வி-ரை) இருக்கு வேளிர் குலம் - சோழர் மரபினின்றும் பின்னாட் பிரிந்ததாக மேற்கொள்ளுவதொரு சிறுபிரிவு “பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்” (தொல் - ந. உரை). |
பொன்னம்பலத்து மணிமுகடு - பொன்னம்பலம் - இது சிற்றம்பலத்தின் வேறாய் அதனையடுத்துத் தென்பாலிலுள்ளது; ஐந்து அம்பலங்களுள் ஒன்று; முகடு-உச்சி. |
பாக்கொங்கிற் பன்னுதுலைப் பசும்பொன் - பா - கொங்கு - பொற்சன்னங்கள் மிக்க நிலப்பரப்புடைய நாடு; துலை - செறிவும் எடையு மிக்குள்ள. துலாம் என்னும் எடையுள்ள - துலாபாரமாகிய என்ற பொருள்களும் அமையும். |
பயில்பிழம்பர் மிசையணிந்த - விளங்கும் ஒளி பெற மேலணிந்த; முன்னிருந்த ஒளியின்மேல் இஃது ஓங்கி மேல் விளங்கும்படி; ஆதித்தன் - ஆதித்தச் சோழன்; இவர் இடங்கழியாரின் பின் வழிவழியில் வந்தவர்; இருக்கு வேளிர் குலத்தினைச் சார்ந்தவர்; இவர் கனகசபையின் முகடு பொன் வேய்ந்த செயல் கல்வெட்டுக்களால் விளங்கும். பொன்னெடுந்தோள் - வீரத்திருமகள் தங்கிய தோள்; பிழம்பு - வடிவம். |
துணைப்பசும் - சுடர்ப்பசும் - பிழம்பர்மிசை - என்பனவும் பாடங்கள். |
3 |
4112. (வி-ரை) ஏறும் - புகழினாலே சிறக்கும்; அடங்கலர் - பகைவர்; முடங்குநெறி - நேர் செல்லாது முடங்கும் வழிகள்; வேதசிவாகமங்களுக்கு முரண்பட்ட புறநெறிகள். பாவநெறிகள்; (முடம் - வளைவு - குற்றம்). |
கனவினிலும் முன்னாதார் - மறந்தேயும் எண்ணாதவர்; நனவில் எண்ணாத தன்றிக் கனவிலும் என இறந்தது தழுவிய எச்சவும்மை. |
தொடர்ந்த - சிவத்தொடர்பாற் கூடிய. |
வேண்டிய - வேண்டியவற்றை யெல்லாம் வேண்டியவாறே வேண்டல் - விரும்புதல்; 4 |
4113. (வி-ரை) தழைப்ப - விளங்க - பெருக - புரியும் - என்று கூட்டுக; இச்செயல்கள் இவரது ஆட்சியில் ஒருங்கு உடனிகழ்ச்சி பெறச் செய்யப்பட்டன. |
சைவ...தருமநெறியொடும் - “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க” என்ற கருத்து; தருமம் - வைதிக தருமம்; இவை உலகியற் பயன் றருவன; சைவநெறி; இவை வீடுபேற்றுப் பயன் றருவன; இகபர மிரண்டும் தழைக்க. |
அர்ச்சனைகள்....விளங்க - சிவன் கோயிற் பூசைகள் சிவாகம விதிப்படி மேன்மேல் விளங்கும்படி; மொய் - மிக்க நெருங்கிய. |
வண் - வள்ளன்மையாலும்; புகழ் - ஆட்சி முறையினாலும் வருவது. |
முறை - நீதிமுறை. புரியும் - வழங்கும். 5 |
4114. (வி-ரை) ஒருநாள் அடியவருக்கு அமுதாக்க என்க; உடல் - உபகரணங்கள்; “ஒளிவிளக் கேற்றற் குடலிலனாய்” (திருவந் - 54). இதனை உடன் என்று பாடங்கொண்டோதுவாருமுண்டு. தவமுடையவராகிய ஒரு அடியவர்; ஆக்க - தாம் செய்து வந்த; செய்விக்க; |
எய்திய செய்தொழில் - பொருந்திய திருவமுதூட்டும் பணி; |