பக்கம் எண் :

பெரியபுராணம்423

     (2) மரபிற் பின் வந்தவரது சிறப்பினாலே வழிவழி முன்னோரது சிறப்பும்
அறியப்படும்.
 
     (3) அரசாட்சியின் குறிக்கோளாவது சைவநெறியும் வைதிகநெறியும் தழைத்து
உலகம் ஒழுகச் செய்தலும், சிவன் கோயில்களில் வழிபாட்டர்ச்சனைகள் மேன்மேல்
விளங்கச் செய்தலுமே யாம்.
 
    (4) களவு முதலாகிய விலக்கிய தொழில்கள் செய்தேயும் அடியார்க்கமுதூட்டுதலும்,
திருத்தொண்டாற்றலும் பிழையாது ஒழுகுதல் அழுந்திய அன்பின் உறைப்பாலாவது;
மூர்க்க நாயனார் வரலாறு பார்க்க.
     (5) தமது பொருளை வவ்வியேனும் திருத்தொண்டு செய்து அதன் பயனைத்
தமக்குக் கொடுக்கும் பெரியோரே உண்மையான சேமநிதியாவர்; அப்பொருள்
சேமமாயிருந்து பயனையும் உதவுதலாற் பண்டாரத்தினும் பெரியார் அவர் என்று
பெரியோர் கொள்வர்.
 
     (6) செல்வ முழுமையும் அடியார்கள் கொள்க என்று பறைசாற்றியும் கொள்ளை
முகந்து கொள்க என்று பறைசாற்றியும் கொள்ளை ஊட்டுதல் படைத்த நிதிப் பயன்
கொள்வார் செய்யும் செயலாம்.

     தலவிசேடம் - கொடும்பாளூர் :- புதுக்கோட்டைச் சமஸ்தானத்தில்
மணற்பாறை என்ற நிலயத்தினின்றும் தென்கிழக்கு புதுக்கோட்டை போகும்
கற்சாலையில் 10- நாழிகை யளவில் அடையத்தக்கது; விராலிமலையினின்று தென்
மேற்கு மட்சாலை வழி 10 - நாழிகை யளவிலும் அடையலாம்; இங்கு உள்ள கோயில்
மிகப் பழமையாய்க் கிலமாயுள்ளது; நாயனாரது திருவுருவம் காணப்படவில்லை. இக்
கோயிலைப் புதுக்கி, நாயனார் திருவுருவம் தாபித்து வழிபடச் செய்வது
உத்தமமாகிய சிவ புண்ணியமாகும்.

 

54. இடங்கழி நாயனாார் புராணம் முற்றும்.