பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்424


சிவமயம்
 

55. செருத்துணை நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை

மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்குந் “தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கு மடியேன்”
 

- திருத்தொண்டத் தொகை - (9)
 

வகை
 

 
கழிநீள் கடனஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்றன் றேவிமுன் மோத்தலுமே
யெழினீள் குமிழ்மலர் மூக்கரித் தானென் றியம்புவராற்
செழுநீர் மருகனன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே.
 

விரி
 

4120. உள்ளும் புறம்புங் குலமரபி னொழுக்கம் வழுவா வொருமைநெறி
கொள்ளு மியல்பிற் குடிமுதலோர் மலிந்த செல்வக் குலப்பதியாந்
தெள்ளுந் திரைகண் மதகுதொறுஞ் சேலுங் கயலுஞ் செழுமணியுந்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருக னாட்டுத் தஞ்சாவூர்.               1
 
     புராணம் :- முன் உரைத்தாங்கு உரைக்க.
 
     தொகை :- தஞ்சாவூரின் தலைவராகிய செருத்துணையாரது அடியார்க்கும் நான்
அடியேன்.
 
     தஞ்சை - இது மருகனாட்டுத் தஞ்சாவூர்; வகை நூலும் விரிநூலும் பார்க்க.
தஞ்சை நாட்டுத் தஞ்சாவூர் வேறு; அதுதான் இப்போது அப்பெயரால் விளக்கமா
யறிப்படுவது. மன்னவன் - தலைவர் என்ற சிறப்புப் பொருள் அளவில் தந்து நின்றது.
 
     வகை :- கழிநீள்.....மலரை - கழிகள் உள்ளே நீண்டு செல்லும் கடலில்
எழுந்தவிடத்தினை உண்டருளிய இறைவருக்காக இருந்த மணமுடைய மலரினை;
மொழி.....மோத்தலுமே - எடுத்து மொழியப்படுகின்ற புகழினையுடைய கழற்சிங்கருடைய
பட்டத்தரசி எடுத்து மோந்தவுடனே; எழில்....இயம்புவரால் - அழகிய நீண்ட குமிழம்பூப்
போன்ற மூக்கினை அரிந்தவர் என்று சொல்லுவர்; செழுநீர்......செருத்துணையே -
செழுநீர் வளமுடைய நல்ல மருகல் நாட்டுத் தஞ்சாவூரில் உள்ள
செருத்துணையாரையே.
 
     செருத்துணையே - என்று இயம்புவர் என்க.