துள்ளது” (137); ஞானமுனிவர்கள் தவஞ்செய்து வழிபடுகின்றார்கள். நெருங்குதல் - பலர் கூடியிருத்தல். |
மானம் - பெருமை; மாட்சிமை; திருத்தொண்டு - திருமுற்றத்தினுள் செய்யும் சரியைத் திருப்பணிகள். முற்றம் விளங்குதல், திருவலகிடுதல், கல் - புல் - முள் முதலியவற்றை அகற்றும் உழவாரப்பணி செய்தல், செடிகளுக்கு நீர் வார்த்தல், களைகட்டுதல் முதலாயின, மானநிலவு - பெருமையோடு விளங்குகின்ற. |
காலங்கள் - வழிபாட்டுக்குரிய பூசைநேரங்கள். |
தொண்டு பொலிய - திருத்தொண்டின் நெறி சிறந்து விளங்க. 3 |
4123. (வி-ரை) உலகு நிகழ்ந்த....மோந்ததற்கு - இதன் விரிவு முன் (4099 - 4100) கழற்சிங்க நாயனார் புராணத்துள் உரைக்கப்பட்டது. வந்து - எய்தி என்று கூட்டுக; வந்த என்பது பாடமாயின், வத்த பொறாமை - மனத்துள் வந்த பொறுக்கலாற்றாமை என்க. |
வழித்தொண்டர் - வழி - சிவநெறி வழியே ஒழுகிய; “பரவுந் தொண்டின் நெறி நின்றார்” - (4121); வழித்தொண்டராதலின் எனக் காரணக் குறிப்புடன் நின்றது; வழித்தொண்டராதலின் தனித்தொண்டர் அரிந்தார் என்று கூட்டுக; ஏனையோர்கள் இவ்வாறுவரும் அபராதங்களைக் கண்டு சிறிதும் கருதாது செல்கின்றாரெனில் அவர்கள் திருத்தொண்டின் வழிநிற்பாரல்லர் என்பதாம். |
எழுந்த - மனத்துள் எழுந்து உடலினைச் செலுத்திய; வேகம் - உடலின் செலவு வேகம்; கோபம் என்றலுமாம்; கோபமாவது சிவாபராதம் கண்டு பொறாத தன்மையால் வருவது. “வேகியானாற் போல்” (சித்தி - 1 - 50); மனக்குற்ற மாகிய குணமன்று. வேகத்தால் - வேகத்தோடு. |
எடுத்தெழுந்து - என்பதும் பாடம். 4 |
4124. (வி-ரை) முற்றி - சேர்ந்து; மற்றவள் - தகாத செய்கை செய்தவள் என்ற குறிப்புப்பட மற்று என்றார். |
கருமென்...பற்றி - இவை மூக்கரியும் தண்டம் செய்தற்குற்ற செயல்கள்; வன்மை பற்றயனவல்ல. |
பரமர்....தடிவன் - இஃது இவர் மனத்துட்கொண்ட துணிவு. |
தலைமைத் தனித்தொண்டர் - இச்செயல்வேறு எவராலும் செய்யலாகாதது என்பது; மேல்வரும் பாட்டுப் பார்க்க. |
முட்டி - என்பதும் பாடம். 5 |
4125. | அடுத்த திருத்தொண் டுலகறியச் செய்த வடலே றனையவர்தாந் தொடுத்த தாம மலரிதழி முடியா ரடிமைத் தொண்டுகட லுடுத்த வுலகி னிகழச் செய் துய்யச் செய்ய பொன்மன்றுள் எடுத்த பாத நிழலடைந்தே யிறவா வின்ப மெய்தினார். 6 |
(இ-ள்) அடுத்த......அனையவர்தாம் - அடுத்ததாகிய திருத்தொண்டினை உலக மறியும்படி செய்த வலிமை பொருந்திய ஆண்சிங்கம் போன்ற செருத்துணையன்பர்; தொடுத்த......செய்து - தொடுக்கப்பட்ட மாலை போன்ற கொன்றைப் பூவினைச் சூடிய திருமுடியினையுடைய சிவபெருமானது அடிமைத் திருத்தொண்டினைக் கடல் சூழ்ந்த |