பக்கம் எண் :

பெரியபுராணம்429

     கற்பனை : (1) இறைவரது திருமுன்றினில் திருப்பணிகள் செய்தலும்
காலந்தோறும் சேர்ந்து சிவனை வழிபடுதலும் சிறந்த சிவதருமங்களாம்.
 
     (2) சிவன் கோயில் திருமுன்றிலில் விழுந்த புதுப்பூ சிவனுக்காவது; அதனை
எடுத்து மோத்தல் சிவாபராதம்.
 
     (3) சிவாபராதத்தினைக் கண்டபோது உரியவாறு தண்டித்தல் அன்பர்களது
கடமை; இதனால் இருவரும் பயனடைகின்றனர். சிவாபராதம் கண்டு தண்டிக்காது
வாளா விருத்தல் பாவம்; அவ்வாறு தண்டித்தல் இயலாவிடின் சிவசிவ என்று சொல்லி
அவ்விடத்தை விட்டு நீங்குக என்பது விதி.
 
     (4) சிவாபராதம் உலகியலில் பெரியார் சிறியார் என்ற பாகுபாடின்றி யாவர்
மாட்டுக் கண்டாலும் ஒறுக்கத்தக்கது.
 
     தலவிசேடம்: மருகல் நாட்டுத் தஞ்சாவூர் : திருமருகலினின்றும்
தென்கிழக்கில் 4 நாழிகையளவிலும், திருச்செங்காட்டங் குடியினின்றும் தெற்கில் 2
நாழிகையளவிலும் உள்ளது. விற்குடி நிலயத்தினின்றும் வடகிழக்கில் 2 நாழிகையளவில்
திருவிற்குடியை யடைந்து அங்கு நின்றும் கிழக்கில் 3 நாழிகையளவில் உள்ள
திருப்பயற்றுர் வழியே அதன்மேல் 2 நாழிகையிலும் அடையலாம். எல்லாம்
மட்சாலைகள். வளப்பாற்றின் வடகரையில் உள்ளது: இது கீழைத்தஞ்சாவூர் என
வழங்கும்; கோயிலில் நாயனாரது திருவுருவம் உள்ளது. இந்நாயனார் திருவாரூரில் குமர
கோட்டத்தில் வசித்தவர் என்பது கர்னபரம்பரை.
 

55. செருத்துணை நாயனார் புராணம் முற்றும்