பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்430


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

56. புகழ்த்துணை நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

 
“புடைசூழ்ந்த புலியதண்மே லரவாட வாடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை (9)
 

வகை
 

 
“செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையஞ் சிறுவிலைத்தாய்
உருவலி கெட்டுண வின்றி யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா
தருவரை வில்லி யருளி னிதியது பெற்றனனே”

- திருத்தொண்டர் திருவந்தாதி (67)
 

விரி
 

4127. செருவிலிபுத் தூர்மன்னுஞ் சிவமறையோர் திருக்குலத்தார்
அருவரைவில் லாளிதனக் ககத்தடிமை யாமதனுக்
கொருவர்தமை நிகரில்லா ருலகத்துப் பரந்தோங்கிப்
பொருவரிய புகழ்நீடு புகழ்த்துணையா ரெனும்பெயரார்.            1
 
     புராணம் : முன் உரைத்தாங்குரைக்க.
 
     தொகை : பக்கத்திற் சூழ்ந்த புலித்தோலாடையின் மேல் பாம்பு ஆட ஆடுகின்ற
இறைவரது பொன்னடிகளுக்கே மனம்வைத்த புகழ்த்துணை நாயனாருக்கு அடியேன்.
 
     ஆடி - ஆடுகின்றவர், பெயர்: பிறைசூடி - மதிசூடி என்பனபோல; பொன்
அடிக்கே - பொன்
- அருமைப்பாடு குறித்தது; பொன் பூண்ட - பொன்னார்ந்த
என்றலுமாம். “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” (தேவா); அடிக்கே
ஏகாரம் பிரிநிலை; மனம் வைத்த - அதனையே தஞ்சமென்று கொண்டும் பிறி
தொன்றினையும் நினையாமலும் தொண்டு செய்த. அதள் - தோல்; அதள் மேல்
அரவு
- கச்சாக வீக்கிய அரவு.
 
     வகை : செருவிலிபுத்தூர்....உணவின்றி - செருவிலிபுத்தூரில் வந்த புகழ்த்
துணையார், உலகில் வற்கடம் வந்தமையால் உடல் வலிமைகெட்டு உணவின்றி வருந்தி;
உமைகோனை.....விழத்தரியாது - சிவபெருமானைச் திருமஞ்சனம் செய்யும் போது கை
சோர்ந்து தண்ணீர்க்கலசம் இறைவரது திருமுடியில் விழத்தரியாது