வருந்தி; அருவரை...பெற்றனனே - அரிய மலைவில்லினையுடைய இறைவரது திருவருளினாலே நித்தல் படிக்காசு பெற்றனர். |
சிறுவிலைத்தாய் - வற்கடமாகி உணவுப் பொருள்கள் சிறுவிலைக்குப் பெற இயலாதபடி குறைதல்; பஞ்சம் வந்து; உணவின்றி - உருவலிகெட்டு என்க; உரு - உடல்; செய் - செயல்; கலசம் - மஞ்சன நீர்க்குடம்; விழ - இறைவர் திருமுடிமேல் விழ; தரியாது - தரியாது அஞ்சி வீழ்ந்து நடுங்க; நிதியம் படிக்காசு; விரிவுகள் புராணத்துக் காண்க. சிறுவிலை - விலையின் அளவுக்குப் பெறும் பண்டம் சிறிதாதல்; பொருளியல் நூன் மரபு வழக்குச் சொல். High Prices என்பர் நவீனர். பண்டம் பெற இயலாதபடி, நாணயத்தின் சத்தி குறைதல். தமிழ் வழக்கு இதனை நன்கறிவித்தல் காண்க. |
தொண்டின் பண்பும் பெயரும் தொகை நூல் கூறிற்று; அவற்றுடன் ஊரும் தொண்டின் வரலாறும் வகை நூல் வகுத்தது. |
விரி: 4127. (இ-ள்) செருவிலிபுத்தூர்....குலத்தார் - செருவிலிபுத்தூரில் நிலை பெற்று வாழும் சிவவேதியர் திருக்குலத்தில் அவதரித்தவர்; அருவரை.......நிகரில்லார் - அரிய மலைவில்லாளியாராகிய சிவபெருமானது அகம்படிமைத் தொண்டு பூண்டொழுகும் அத்தன்மையில் தமக்கு நிகராக ஒருவரையு மில்லாதவர்; உலகத்து ..பெயரார் - உலகத்தில் பரந்து ஓங்கும் ஒப்பற்ற புகழ்நீடிய புகழ்த்துணையார் என்னும் பெயரையுடையவர். |
(வி-ரை) அருவரை வில்லாளி - வரை - பொன்மலை; “அருவரை வில்லி” வகை நூல். |
அகத்தடிமை.......நிகரில்லார் - அகத்தடிமைப் பண்பில் ஒப்பில்லாதவர்; அகத்தொண்டாவன; திருமேனி தீண்டித் திருமஞ்சனம் செய்தல், அலங்கரித்தல், நிவேதித்தல், பூசித்தல், கருவறை விளக்குதல் முதலாயின. |
உலகத்து.....புகழ்நீடு - “எங்கு நிகழ்ந்த புகழ்த்துணையார்” (4126.) புகழ்த் துணையார் - என்றது காரணக்குறி என்றபடி. |
அருவிவரை வில்லாளிக்கு - என்பதும் பாடம். 1 |
4128. | தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுநாட் பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்தும் “எங்கோமான் றனைவிடுவே னல்லே” றிராப்பகலுந் கொங்கார்பன் மலர்கொண்டு குளிர்புனல்கொண் டர்ச்சிப்பார், 2 |
4129. | மாலயனுக் கரியானை மஞ்சனமாட் டும்பொழுது சாலவுறு பசிப்பிணியால் வருந்திநிலை தளர்வெய்திக் கோலநிறை புனறாங்கு குடந்தாங்க மாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார், 3 |
4130. | சங்கரன்ற னருளாலோர் துயில்வந்து தமையடைய அங்கணனுங் கனவின்க னருள்புரிவா “னருந்துணவு மங்கியநாள் கழிவளவும் வைப்பதுநித் தமுமொருகா சிங்குனக்கு நா” மென்ன விடர்நீங்கி எழுந்திருந்தார். 4 |