4128. (இ-ள்) தங்கோனை ...வழிபடுநாள் - தமது பெருமானைத் தவத்தினாலே தத்துவத்தின் நெறியாலே வழிபட்டுவருகின்ற நாளிலே; பொங்கோதம்.....பசிபுரிந்தும் - பொங்கும் கடல் சூழ்ந்த உலகத்திலே வற்கடம் வந்து உணவின்றிப் பசிமிகுந்திருந்தும்; எங்கோமான்.....இராப்பகலும் - எமது பெருமானை நான் விடுவேனல்லேன் என்று இரவும் பகலுமாக; கொங்கார் .....அருச்சிப்பார் - மணமுடைய பல மலர்களைக்கொண்டும்; குளிர்ந்த நீரினைக் கொண்டும் அருச்சிப்பாராகி, 2 |
4129. (இ-ள்) மாலயனுக்கு.......பொழுது - மாலுக்கும் அயனுக்கும் தேடற்கரிய பெருமானைத் திருமஞ்சனமாட்டும் பொழுது; சாலவுறு.....தளர் வெய்தி - மிகவும் பொருந்திய பசி நோயினாலே வருத்தமுற்று நிலைதளர்ந்து; கோல....மாட்டாமை - அழகிய நிறைந்த நீரினை உடைய குடத்தினை தாங்க மாட்டாது; ஆலமணி....அயர்வார் - விடமணிந்த கண்டத்தினை யுடைய பெருமானது திருமுடிமீது வீழ்த்துச் சோர்வாராகி, 3 |
4130. (இ-ள்) சங்கரன்றன்....அடைய - சங்கரருடைய திருவருளாலே உறக்கம் வந்து தம்மையடைய; அங்கணனும்......புரிவார் - இறைவரும் கனவு நிலையில் அவருக்கு அருள் செய்வாராய்; அருந்துணவு......என்ன - உண்ணும் உணவு குறைந்த காலம் தீருமளவும் இங்கு உனக்கு நாம் நித்தமும் ஒரு காசு வைப்போம் என்று அருளிச் செய்ய; இடர் நீங்கி எழுந்திருந்தார் - துன்பம் நீங்கித் துயிலுணர்ந்து எழுந்தனர். 4 |
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. |
4128. (வி-ரை) தவம் - சிவபூசை; தத்துவத்தின் வழிபடுதலாவது ,எல்லாப் பொருள்களையும் தத்துவங்களின் வைத்து உண்மை யுணர்த்தி வழிபட்டுய்யும் நெறியினை வகுக்கும் சிவாகம விதியாலே. |
வற்கடம் - பஞ்சம் - வறுமைக்காலம். |
பசிபுரிந்தும் - பசியினால் வருந்திய போதிலும்; புரிதல் ஈண்டு மிக உண்டாதல் என்னும் பொருட்டு. |
எங்கோமான்றனை விடுவேனல்லேன் - “கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்” (தேவா - அரசு); கோமான்றனை - கோமானது பூசையினை. |
மலர்கொண்டு புனல்கொண்டு அர்ச்சிப்பார் - பூவுநீருங் கொண்டு பூசிப்பார்; “புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு ” (திருமந்). “பூவொடு நீர் சுமந்தேத்தி” (தேவா - அரசு). இராப்பகல் - இரவும் பகலும்; உம்மைத்தொகை. |
அருச்சிப்பாராகி - வீழ்ந்து அயர்வாராகி (4129) அடைய - நீங்கி - எழுந்திருந்தார் (4130) என்று கூட்டுக. அருச்சனை - பூசை என்னும் பொருளில் வந்தது. 2 |
4129. (வி-ரை) நிலைதளர்கல் - உடல் தடுமாறுதல்; கோலம் - அழகு; மலர் அறுகு - முதலியவை பெய்து மந்திரித்த தூய்மை நிலையே கோலம் எனப்பட்டது. |
புனல் தாங்கு குடம் - நீர் நிறைந்த குடம். |
தாங்கு குடம் தாங்கமாட்டாமை - சொல்லணி; வீழ்ந்து அயர்வார் - வழுத்திச் சோர்ந்து வீழ்ந்தனர். மாட்டாமை - மாட்டாமையால். |
பசிப்பிணியால் - “உணவின்றி” வகை நூல். சாலவுறு - மிகப் பொருந்திய; ஒருபொருட் பன்மொழி; “சாலவுறு தவநனி கூர்மிகல்” |
அரியானை மஞ்சனமாட்டும் பொழுது - “உமைகோனை மஞ்சனஞ்செய் தருவதோர் போது” வகைநூல். |