பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்434

     காசு - அது கைக்கொண்டு - இவ்வருளிப்பாடு “நிலந்த ணீரோ டனல்கால்
விசும்பி னீர்மையான், சிலந்தி செங்கட் சோழ னாகச் செய்தானூர், அலந்த வடியா
னற்றைக் கன்றோர் காசெய்திப்
,புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே”
(பிள் - காந்தாரம் - அரிசிற்கரைப்புத்தூர் - 7) என்றும், “அகத்தடிமை செய்யு
மந்தணன்றா னரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான், மிகத்தளர் வெய்திக்
குடத்தைநும் முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும், வகுத்தவ னுக்குதித்
தற்படியும் வரு மென்றொரு காசினை நின்றநன்றிப்
, புகழ்த்துணை கைப்புகச்
செய்து கந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே” (நம்பி - இந்தளம் - புத்தூ - 6)
என்றும் ஆளுடையபிள்ளையாராலும் நம்பிகளாலும் சிறப்பித்துப் போற்றப்பட்டது;
“திருப்புத்தூர்ப் புனிதனைப் பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந், துரிசி னன்னெறி
தோன்றிடுங் காண்மினே” “மேனிசெம் பொன்னு மொப்பர்” (குறுந்) என்ற அரசுகள்
திருவாக்குக்களும் இக்குறிப்புத்தருவன.                                   5
 

4132.    அந்நாள்போ லெந்நாளு மளித்தகா சதுகொண்டே
இன்னாத பசிப்பிணிவந் திறுத்தநா ணீங்கியபின்
மின்னார்செஞ் சடையார்க்கு மெய்யடிமைத் தொழில்செய்து
பொன்னாட்டி னமரர்தொழப் புனிதரடி நிழல்சேர்ந்தார்.                6
 
     (இ-ள்) அந்நாள் போல்...கொண்டே - அந்நாளைப் போலவே பின் எந்நாளிலும்
இறைவர் நாடோறும் அளித்த காசினைக் கொண்டே; இன்னாத.....நீங்கிய பின் -
துன்பமுடைய பசி வந்து சங்கடம் விளைத்த வற்கடம் நீங்கியபின்; மின்னார்.....செய்து -
ஒளியுடைய செஞ்சடையினையுடைய இறைவரது மெய்யடிமைத் தொழிலாகிய அகம்படித்
தொண்டு செய்து இருந்து; பொன்னாட்டின் ...சேர்ந்தார் - தேவலோகத்தில் உள்ள
தேவர்கள் தொழும்படி சிவபெருமான் றிருவடியினைச் சேர்ந்தனர்.
 
     (வி-ரை) எந்நாளும் அளித்த கரசு - நாடோறும் இறைவர் வைத்தருளிய
படிக்காசு;
 
     அது கொண்டே - நீங்கியபின் - என்க; அதன் உதவியினைக்கொண்டே
அமுதுண்டு துன்பம் நீங்கியபின். இறுத்தல் - தங்குதல்; கொடுத்தல்.
 
     மின்னார்....செய்து - மெய்யடிமை - மெய் - உண்மையான என்றும்,
திருமேனிக்காகிய என்றும் உரைக்கநின்றது. செய்து - இது வற்கடம் நீங்கியபின் தமது
முன்னை யியல்பிற் செய்தவாறே செய்த என்பதாம்.
 
     பொன்னாடு - தேவருலகம்; சிவலோகமுமாம்.
 
     அமரர் தொழ - சிவன் அடியார்கள் வீடுபெறும் நிலை தேவர்கள் தொழத்
தக்கது என்பதாம்.                                                    6
 
4133. பந்தணையு மெல்விரலாள் பாகத்தார் திருப்பாதம்
வந்தணையு மனத்துணையார் புகழ்த்துணையார் கழல்வாழ்த்திச்
சந்தனையு மணிப்புயத்துத் தனிவீர ராந்தலைவர்
கொந்தணையு மலரலங்கற் கோப்புலியார் செயலுரைப்பாம்.             7
 
     (இ-ள்) பந்தணையும்........கழல் வாழ்த்தி - பந்துசேரும் மெல்லிய
விரல்களையுடைய உமையம்மையாரது பாகத்தினை உடைய இறைவரது திருவடிகள்
வந்து அணைகின்ற மனத்துணை பெற்றவராகிய புகழ்த்துணையாரது கழல்களை
வாழ்த்தி அத்துணைக்கொண்டு; சந்தணியும்.....செயலுரைப்பாம் - சந்தனக்கலவையணிந்த
அழகிய