பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்436


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

   57. கோட்புலி நாயனார் புராணம்
_ _ _ _ _
 

   தொகை
 

“அடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை (9)
 

வகை
 

   
“பெற்ற முயர்த்தோன் ” விரையாக் கலி” பிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழிற்றிரு நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்குநங் கோட்புலி நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட லென்றுல கேத்தும் பெருந்தகையே.”

- திருத்தொண்டர் திருவந்தாதி (68)
 

விரி
 

4134. நலம்பெருகுஞ் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண்
குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியா ரெனும்பெயரார்
தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியா ராய்வேற்றுப்
புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப்பார்,       1
                                 
 
4135. மன்னவன்பாற் பெறுஞ்சிறப்பின் வளமெல்லா மதியணியும்
பிஞ்ஞகர்தங் கோயிறொறுந் திருவமுதின் படிபெருகச்
செந்நென்மலைக் குவடாகச் செய்துவருந் திருப்பணியே
பன்னெடுநாட் செய்தொழுகும் பாங்குபுரிந் தோங்குநாள்,                2
 
4136. வேந்தனே வலிற்பகைஞர் வெம்முனைமேற் செல்கின்றார்,
பாந்தள்பூ ணெனவணிந்தார் தமக்கமுது படியாக
ஏந்தலார் தாமெய்து மளவும்வேண் டுஞ்செந்நெல்
வாய்ந்தகூ டவைகட்டி வழிக்கொள்வார் மொழிகின்றார்.                 3
 
4137. தந்தமர்க ளாயினார் தமக்கெல்லாந் தனித்தனியே
“எந்தையார்க் கமுதுபடிக் கேற்றியநெல் லிவையழிக்கச்
சிந்தையாற் றானினைவார் திருவிரையாக் கலி” யென்று
வந்தனையா லுரைத்தகன்றார் மன்னவன்மாற் றார்முனைமேல்.            4
 
     புராணம் :- முன்னுரைத் தாங்குரைத்துக்கொள்க.