கூடுகளைக்கட்டி; வழிக்கொள்வார் மொழிகின்றார் - பயணம் செல்பவர் சொல்கின்றாராகி, 3 |
4137. (இ-ள்) தம்.....தனித்தனியே - தமது சுற்றத்தார்க ளாயினார்களவர்கள் எல்லாருக்கும் தனித்தனியே; எந்தையார்க்கு .....என்று - எமது இறைவருக்கு அமுது படிக்காகச் சேர்த்துள்ள இந்நெற்கூடுகளைத் தாம் அழிக்கும்படி மனத்தினாற்றானும் நினைப்பார்களாயின் திருவிரையாக்கலியின் மேல் ஆணை நிகழ்வதாக என்று கூறி; வந்தனையால்...முனைமேல் - வந்தனை செய்த கூறிவிட்டு அரசரது பகைவர்களது போரின் மேல் சென்றனர். 4 |
இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4134. (வி-ரை) குலம் பெருகுதல் - குலம்புகழாற் பெருக நிகழ்தல்; உயர்வடைதல்; தந்திரியார் - சேனாபதியார்; தந்திரம் - சேனை; வேற்றுப்புலம் - பகைவரது நாடு; புலம் - இடம்; இடவாகு பெயராய் மக்களைக் குறித்தது; வேறு - பண்பாகு பெயராய்ப் பகைவேந்தரைக் குறித்தது. |
வேற்றுப்புலம்........போர் விளைப்பார் - இவர் போர் முனையிற் சென்று போர்புரிந்தாற் பகைவரது நாடுகளில் பெருகிய துன்பம் வருவதன்றி வேறில்லை; இவரது வெற்றியினால், என்பது, நலம் பெருகும் - நன்மைமிக்க; துயர்பெருக விணைப்ப என்க. |
புகழ்விளைப்பார் - வெற்றியினால் தமது அரசருக்கும் தமக்கும் புகழ் பெருகச் செய்வார். தலம் பெருகும் - உலகிற்சிறந்த; |
சோணாட்டு - சோழநாட்டிலே. சோழன்நாடு - சோணாடு என வந்தது - மருஉ மொழி. |
துயர்விளைய - என்பதும் பாடம். 1 |
4135. (வி-ரை) பெறும் சிறப்பின் வளம் - சேனாபதித் தன்மைக்காகவும், அதனில் விளைக்கும் வெற்றியின் புகழுக்காகவும் ஊதியமாகவும் சிறப்பாகவும் பெறும் பொருள்கள்; வளம் .ஊதியம். சிறப்பு - அவ்வப்போது செய்வது. |
திருவமுதின்....குவடாக - இறைவரது பூசையினில் வேண்டும் திருவமுதுக் கட்டளை மேன்மேற் பெருகும்படிக்குரிய செந்நெல்லினை மலையின் உச்சி போலாக; மலைக்குவடு ஆக - குவடு - சிகரம்; நெற்குவைகள் சிகரத்தையுடைய மலைகளைப் போன்றன என்பது; ஆக - ஆக்கச் சொல் உவமை குறித்தது. |
செய்துவரும் திருப்பணியே - சிவனுக்கமுதுபடி பெருகச் செய்தல் திருப்பணியா மென்பது; சிவனுக்காகும் படியினைக் குறைத்தல் மாபாவ மென்பதும், அது ஆயுளைக் குறைக்கு மென்பதும் மந்தாதர என்னும் அரசரது வரலாற்றினின்றும் அறியப்படும். (1116) இவையெல்லாம் எண்ணாது சிவன் கோயிற் படித்தரத்தினைக் குறைத்தலும், சிவதிரவியங்கொண்டு ஆடம்பரங்கள் செய்தலும், பசுதருமங்களே மேலானவை (மருத்துவச்சாலை - தண்ணீர் வசதி - சாலை முதலியன) என்று கொண்டு மனம்போனபடி சிவனுக்குரிய பதிப்பொருள்களை தத்தம் அற்ப அதிகாரச் செருக்குக்கொண்டு பசுதருமங்களிற் செலவு செய்தலும் இந்நாளிற் கோயில் அதிகாரிகளின் கொடுந் தொழிலாயிருக்கக் காண்கின்றோம். கொடிது! கொடிது!! |
பாங்கு - அதற்கு வேண்டும் ஒழுங்குகள்; ஓங்குதல் - சிறப்புறுதல். |
ஒழுகுநாள் - என்பதும் பாடம். 2 |
4136. (வி-ரை) செல்கின்றார் - செல்கின்ற நாயனார் அவ்வாறு செல்லும் போது. |