பக்கம் எண் :

பெரியபுராணம்441

     அந்நகர் - தமது நகரும் அரசனது நகரமுமாகிய அந்த என முன்னறிசுட்டு.
அந்நகரினைக் குறிப்பார் நாட்டியத்தான் குடித்தலைவர் என்றார்.
 
     அறிந்து - தெரிந்துகொண்டு; அது அறியாமே - தாம் அறிந்த அதனைச்
சுற்றத்தார் அறியாதபடி மறைத்து ஒழுகி. தமது கருத்து நிறைவேற்ற இது
வேண்டப்பட்டது.
 
     துன்னுதல் - சேர்தல்; துணிப்பன் - துண்டமாக்குவன்; துணி - துண்டம்;
துணிவினர் - துணிந்த காரணமும் பயனும் மேலிரண்டு பாட்டுக்களானும் கூறுகின்றார்.
துணிவினராய்த் துள்ளினார் என்க.                                       6
 
4140. எதிர்கொண்ட தமர்க்கெல்லா மினியமொழி பலமொழிந்து
மதிதங்கு சுடர்மணிமா ளிகையின்கண் வந்தணைந்து
“பதிகொண்ட சுற்றத்தார்க் கெல்லாம்பைந் துகினிதியம்
அதிகந்தத் தளிப்பதனுக் கழைமின்க” ளென்றுரைத்து,                     7
 
4141. எல்லாரும் புகுந்ததற்பி னிருநிதிய மளிப்பார்போல்
நல்லார்தம் பேரோன்முன் கடைகாக்க, “நாதன்றன்
வல்லாணை மறுத்தமுது படியழிந்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ?” வெனக்கனன்று கொலைபுரிவார்,               8
4142.    தந்தையார் தாயார்மற் றுடன்பிறந்தார் தாரங்கள்
பந்தமார் சுற்றத்தார் பதியடியார் மதியணியும்
எந்தையார் திருப்படிமற் றுண்ணவிசைந் தார்களையுஞ்
சிந்தவாள் கொடுதுணிந்தார் தீயவினைப் பவந்துணிப்பார்.                  9
 
     4140. (இ-ள்) எதிர்கொண்ட....மொழிந்து - தம்மை எதிர்கொண்டு வரவேற்ற
சுற்றத்தாரெல்லாருக்கும் இனிய மொழிகள் பலவற்றையும் சொல்லி;
மதிதங்கு.....அணைந்து - சந்திரன் தங்கும் ஒளியும் அழகும் உடைய தமது
திருமாளிகையில் வந்து அணைந்து; பதிகொண்ட.........உரைத்து - அப்பதியில் உள்ள
சுற்றத்தார்களுக்கெல்லாம் பைந்துகிலும் நல்ல நிதியமும் தந்தளிப்பதற்கு அழையுங்கள்
என்று சொல்லி,                                                         7
 
     4141. (இ-ள்) எல்லாரும்.......காக்க - சுற்றத்தார் எல்லாரும் வந்து புகுந்ததன்பின்
பெரிய நிதியம் கொடுப்பவர் போலக் காட்டி நல்லவராகிய கோட்புலியார் தமது
பெயரினையுடைய காவலாளன் முன்வாயிலினைக் காவலாக நின்று காக்க;
நாதன்றன்........எனக்கன்று - இறைவரது வலிய ஆணையினையும் மறுத்து அமுதுக்காக
இருந்த நெல்லை அழித்து உண்ட பாவம்புரிந்த கிளைஞரை யெல்லாம் கொல்லாதே
விடுவேனோ? என்று மிகச் சினந்து; கொலைபுரிவார் - கொலை செய்வாராகி,        8
                                   
 
     4142. (இ-ள்) தந்தையார்......பதியடியார் - தந்தையார், தாயார், மற்று
உடன்பிறந்தவர், மனைவியர்கள், பந்தமுடைய சுற்றத்தவர்கள், அவ்வூரின் உரிமை
அடிமைகள் என்ற இவர்களெல்லாரையும்; மதியணியும்....இசைந்தார்களையும் - எமது
தந்தையாராகிய இறைவரது திருவமுது படி நெல்லினை இன்னும் உண்ணுதற்கு
இசைந்தார்களையும்; தீய....துணிப்பார் - தீயவினையின் பயனைச் சேதிப்பாராகிய
நாயனார்; சிந்த....துணிப்பார் - தீயவினையின் பயனைச் சேதிப்பாராகிய நாயனார்;
சிந்த...துணிந்தார் - உடல் சிதையும்படி வாளினைக்கொண்டு துண்டமாக வெட்டினர்.  9
                 
 
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.