னிப்பதென்பது இந்நாள் உலகியற் சட்டங்களிற் காண்பது. அஃது உயிரினியல் பற்றிய கன்மப் பொறுப்புக் கேலாததாம். |
எடுத்தெறிந்து......ஏற்றார் - அக்குழவியை நாயனார் துண்டிக்க நிலை; குழவி கீழே கிடப்பதொரு சிறுபண்டமாதலின் கிடந்தவாறே துண்டித்தல் இயலாமையின் எடுத்தெறிந்து துண்டமாக்க வேண்டியதாயிற்று என்க. |
மின் நல்ல வடிவாள் - மின்னுதல் - வாளின் ஒளி; வடித்தல் - கூர்மை குறித்தது. நல்ல - நன்மை பயத்தற் குறிப்பு; எறிபத்த நாயனார் புராணத்துள் எறிபத்தர் கையிற்கொண்டது மங்கலம் பொருந்திய மழுவென்ற வரலாறும், மேல் “உன்னுடைய கைவாளால்'' என்பதும் காண்க சேய்ஞலூர்ப பிள்ளையார்தந் திருக்கையிற் கோல மழுவால்” (1263) என்ற கருத்தும் கருதுக. |
இவ்விரண்டு பாட்டினாலும் நாயனார் உலகியல்பு எல்லாம் கடந்து முற்றும் சிவமே பற்றாக நின்றநிலை கூறப்பட்டன. “உலகினி லியற்கையை ஒழிந்திட் டற்றவர்க்கற்ற சிவன்” (தேவா) என்றபடி அந்நிலையே சிவன் வெளிப்பட்டருளும் நிலை என்பதற்கெழுந்தது மேல்வரும் திருப்பாட்டு. 10 |
| 4144. | அந்நிலையே சிவபெருமா னன்பரெதிர் வெளியேநின் “றுன்னுடைய கைவாளா லுறுபாச மறுத்தகிளை பொன்னுலகின் மேலுகம் புக்கணையப் புகழோய்நீ இந்நிலைநம் முடனணை” கென் றேவியெழுந் தருளினார். 11 |
(இ-ள்) அந்நிலையே.......நின்று - அந்நிலையிலே அப்போதே சிவபெருமான் அன்பரெதிரில் வெளிப்பட்டு எழுந்தருளி நின்று; உன்னுடைய...என்று ஏவி - உன்னுடைய கையில் ஏந்தியவாளினால் துண்டமாக்கித் தண்டிக்கப்பட்டதனாலே இங்குத் தம்மைப்பற்றிய பாசத்தை அறுத்துப் புனிதராகிய உன் சுற்றத்தார்கள் தேவருலகத்தினும் மேலாகிய உலகங்களிலும் புகுந்து பின் வந்து முறையில் நமது உலகத்தினிற் சார, நீ இந்நிலையில் இப்போதே நம்முடனே அணைவாயாக என்று கட்டளையிட்டு; எழுந்தருளினார் - அன்பரை உடன் கொண்டெழுந்தருளினர். |
(வி-ரை) அந்நிலையே - உயிர்ச்சார்புகளாகிய அனைத்தையும் அறுத்தெறிந்த அந்நிலையில் அப்போதே. |
வெளியே - வெளிப்பட்டு; முன்னரும் அந்நிகழ்ச்சிகளின் உடனாய் மறைந்து தாமிருந்தனர். இப்போது வெளிப்பட்டனர் என்க. |
உன்னுடைய....அணைய - பொன்னுலகு - தேவருலகு; மேலுலகம் - போக பூமிகள்; பொன்னுலகினும் மேல் உலகங்களிலும் என்க; புக்கு - அணைய - புகுந்து பின்னர் வந்து சார; இவ்வாறு புகுதல் முன் கன்மங்க ளறும் பொருட்டென்க. நாயனாரது வாளால் வெட்டப்பட்டுத் தீர்ந்தது சிவனாரை மறுத்ததும் சிவன்பொருள் நுகர்ந்ததுமாகிய சிவாபராதங்களேயாம். அதற்குமுன் உள்ள பிற கன்மங்களும் தீர்ந்த பின்னரே, சிவனுலகம் புகலாமாதலின் அவை தீரும் பொருட்டுவிண் முதலிய உலகங்களிற் சேறல் வேண்டப்பட்டதென்க. |
உறுபாசம் உன்னுடைய கைவாளால் அறுத்த - கிளை - அணைய என்க. அறுத்த - அறுக்கப்பட்ட; செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது; உறுபாசம் - ஆனை மறுத்ததனால் உற்ற பாவம்; அறுத்த கிளை - அறுத்ததனால் புனிதராகியமையின் எனக் காரணக் குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஞதினார்; இக்கிளைஞர், உயிர் நீத்து இறந்துபடாமைக் காக்க நேரும்போது செய்யத்தகுவன என்ற உலகியல் |