பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்446

துரைத்துக்கொள்க; அத்தன் முதலிய தன்மைகளை உடையனாயினும் அவற்றுட்படாது
வேறு முத்தனுமாவன் என்க. முத்தன் - இவற்றுட் கட்டுப்படாது நீங்கியவன்;
இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்.
 
     அடைந்து கிளைமுதல் தடிந்த - அடைந்து - அடைந்தமையாலே; இறைவரே
அத்தன் முதலிய எல்லாமாவார்; ஏனையோராகிய உலக பாசத்தவர் அவ்வாறாகார்
என்ற துணிவு பெற்றவராதலின் அவர்களை வேரறத் தடிந்தார் என்பதாம்; முதல் -
வேர்; “நம்பொருட்டா லீன்ற தாதை விழவெறிந்தாய்; அடுத்த தாதை யினியுனக்கு நாம்”
(1259) என்ற சண்டீச நாயனார் சரிதம் காண்க. இஃது இந்நாயனாரின் சரித சாரமாகிய
முடிபு.
 
     கூட்டத்தில் - திருக்கூட்டத்தவர்களாகிய தொகையடியார்களுள்ளே; பரிசு -
தன்மை; திருக்கூட்டத்தவர்களைப்பற்றிப் பண்பு மட்டிற் போற்றலாம் தகைமைத்து
அன்றி, வரலாறுகள் பேசுதற்கு இயைபின்றாதலின் பரிசு என்றார்; இவ்வாறாதலின்,
“பொய்யடிமை யில்லாத புலவர் கூட்டத்”தைப்பற்றி, அவர்களுள் வகைநூலிற் குறித்த
கபிலர் பரணர் நக்கீரரின் வரலாறுகள் இவ்விரிநூலுட் காணவில்லை என்றும், அவர்
திருவாவூரடிகளாவார் என்றும், பலவாறு நவீன ஆராய்ச்சியாள் கிளப்பிய வாதங்களுக்கு
ஈண்டு இடமின்மை தெரிந்து கொள்க.                                    12
 

_ _ _ _ _


சிவமயம்
 

சுந்தரமூர்த்தி நாயனார் துதி

_ _ _ _ _
 

தொகை
 

 
“ஆரூர னாரூரி லம்மானுக் காளே-”

- திருத்தொண்டத்தொகை - (9)
 

வகை
 

 
தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபாற்
புகுமணக் காதலி னாலொற்றி யூருறை புண்ணியன்றன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளாலிவ் வியனுலகம்
நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந் தானாவ லூரரசே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (69)
 

விரி
 

4146. மேவரிய பெருந்தவம்யான் முன்புவிளைத் தனவென்னோ?
யாவதுமோர் பொருளல்லா வென்மனத்து மன்றிவே
நாவலர்கா வலர்பெருகு நதிகிழிய வழிநடந்த
சேவடிப்போ தெப்போதுஞ் சென்னியிலு மலர்ந்தனவால்.                 13
 
     தொகை:- முன் உரைத்தபடி உரைக்க.