பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்448

     முன்பு யான் விளைத்தன பெருத்தவம் என்னோ? - விளைத்தன -
நம்பிகளது திருவடிச் சிந்தையும் வணக்கமும் முன்னைப் பெருந்தவத்தாலன்றிக் கூடா
என்பதாம்; விளைத்தன - தவப்பயன்கள்; முன் விளைத்தன என்னோ? - இப்பேறு
பெற இப்பிறவியிற் செய்த தவங்களை யானறியேன்; ஒன்றும் செய்யவில்லை; ஆனால்,
இதுவோ தவமன்றிக் கூடாது; ஆதலின் முன்பு விளைத்தனவே ஆதல் வேண்டும்
என்பதாம்; “மேற் செய்துழி” என்ற ஞான நூற்கருத்து; விளைத்தன - ஒன்றினாற் கூடா
தென்றற்குப் பன்மையாற் கூறினார்.
 
     பெருகு நதி கிழிய வழிநடந்த சேவடி - நம்பிகளும் சேரமானாரும், காவிரி
நீங்கிக் காட்டிய மணல் வழியாற் சென்று திருவையாற்றினை வணங்கி மீண்டருளிய
நிகழ்ச்சி குறித்தது. (3878 - 3886); நதிகிழிய - மேல்பாற்றடையுண்டும் கீழ்பால்
வடிந்தும் காட்டிய; வழி - வழியின்கண்ணே.                              13
 
     சரிதச்சுருக்கம் : கோட்புலி நாயனார் புராணம் :- சோழநாட்டில்
திருநாட்டியத்தான் குடியில் வேளாண்குடியில் வந்த கோட்புலியார் அரசரிடத்துச்
சேனாதிபதியாராய் மாற்றாரது புலங்களைப் போரில் வென்று புகழுடன் விளங்கினார்.
அரசன்பாற்பெற்ற சிறப்பின் வளங்களை யெல்லாம் சிவன் கோயிலில் திருவமுதுபடி
பெருகச் செய்யும் திருப்பணிக்காக்கி அதனையே பன்னெடு நாள் செய்தனர். அந்நாளில்
அவர் அரசரது போரினை மேற்கொண்டு பகைவர்மேற் செல்ல நேர்ந்தது. அப்போது
தாம் திரும்பிவரும் வரையில் சிவனுக்கமுதுபடிக்காகும் நெல்லினைக் கூடுகட்டி
வைத்துத், தம் சுற்றத்தார்க் கெல்லாம் தனித்தனியே, இந்நெல்லை அளிக்க மனத்தா
னினைப்பினும் “திருவிரையாக்கலி” என்று சிவனது ஆணையினை வந்தனை செய்து
கூறிப், போர்முனைமேற் சென்றார். சில நாளில் வற்காலம் வந்தது. உணவுப்
பண்டங்களின்றிச் சுற்றத்தார் வாடினர்; “உணவின்றி யிறப்பதனின், சிவனமுது படியினை
உண்டாகிலும் பிழைத்துக் குற்றமறப் பின் கொடுப்போம்” என்று துணிந்தனர்; நெற்கூடு
அழித்து உண்டனர்.
 
     சில நாளில் வெற்றியுடன் மீண்டு அரசன்பால் நிதிக்குவை முதலிய சிறப்புப்
பெற்ற கோட்புலியார், இச்செய்தியினைத் தெரிந்து, அவ்வாறு தாம் தெரிந்த
செய்தியைப் பிறர் தெரியாதபடி, அச்சுற்றத்தாரை யெல்லாம் துணிப்பன் என்னும்
துணிவுடன் திருமாளிகைக்குச் சென்றணைந்தனர். தம்மை எதிர்கொண்ட
சுற்றத்தார்க்கெல்லாம் இனியவற்றை மொழிந்தனர். அவ்வூரில் தமது
சுற்றத்தார்க்கெல்லாம் நிதியும் துணியும் அதிகமாகக் கொடுக்க எல்லாரையும் அழைக்க
என்று உரைத்தனர். அவர்கள் எல்லாரும் வந்ததற்பின் தமது பெயரினை உடைய
கோட்புலி என்ற காவலாளனை முன்கடை காக்கவைத்தனர். நிதியம் அளிப்பார்
போலச், சிவனதாணையினை மறுத்து அமுதுபடியை அழித்த மறக்கிளையைக்
கொல்லாதே விடுவேனோ? என்று கனன்று, வாளினை எடுத்துக் கொல்வாராயினர்.
தந்தையார் - தாயார் - உடன்பிறந்தார் - சுற்றத்தார் - பதியடியார் - மற்றும்
அமுதுபடியுண்ண இசைந்தார் - இவர்களை யெல்லாம் அவர்களது தீயவினைப்
பவத்தினைத் துணிப்பாராய்த் துண்டஞ் செய்தனர். அங்கு ஒரு பசுங்குழவி தப்பியது;
காவலாளன் இக்குழவி அமுதுபடி யன்னமுண்டிலது; ஒரு குடிக்கு ஒரு மகன்; அருள்
செய்ய வேண்டுமென்று இறைஞ்சினன். “அவ்வன்னம் முண்டவளது முலைப்பாலினை
உண்டது” என்று கூறி அதனை எடுத்து எறிந்து வாளினால் இரு துணியாக விழ
ஏற்றனர்.
 
     அப்போது இறைவர் வெளிப்பட்டனர். உன் கைவாளினால் உறுபாசம் அறுத்த கிளைஞர் தேவருலகம் முதலிய போக பூமிகளிற் புக்குப், பின்னர்,