நம்முலகம் அடைய, நீ இந்நிலையே நம்முடன் அணைக என்று அருளி எழுந்தருளினர். |
குறிப்பு :- இந்நாயனாரது நம்பிகள் சார்புபற்றிய வரலாறு முன் ஏயர்கோன் கலிக்காமனார் புராணத்து உரைக்கப்பட்டது. |
கற்பனை :- (1) தாம் தாம் செய்தொழிற் பெருஞ்சிறப்பின் வந்த வளமெல்லாம் சிவன்திருவமுதின் படி பெருகச் செய்தல் சிவன்றிருப்பணியாகிய பெருஞ்சிவ தருமமாம். |
(2) சிவனது திருவமுதுபடிக்குரிய நெல்லினை எவ்வகையாலேனும் எக்காலத்திலேனும் அழித்தலும், கவர்தலும், தாமுண்ண நினைத்தலும் பெரும்பாவமும் சிவாபராதமுமாம். |
(3) சிவன் திரு ஆணையாகிய “திருவிரையாக்கலி”யின் வரம்பை மறுத்தல் பெரும் சிவாபராதமாம்; அதற்குக் கொலைத்தண்டமே விதி. |
(4) உணவின்றி இறக்க நேரிட்டாலும், சிவனமுதுபடியினைப் பின் கொடுப்போமென்றாகிலும் உண்டு உயிர் பிழைத்தலும் சிவாபராதமாம். |
(5) சிவாபராதத்திற்கு உரிய வினைத்தீர்வாகிய தண்டமியற்றுதலில் தந்தை, தாய், மனைவி, மகவு, குழவி என்று உடற்சார்பு பற்றிய பாகுபாடுகளைக் கருதுதற்கு இயைபின்று. |
(6) சிவச்சார்பு ஒன்றினையே பற்றி உடற்சார்புத் தொடக்குகளை அறுத்த அந்நிலையே சிவன் வெளிப்பட்டுத் தம் கழற் சார்பு தந்தளிப்பர். |
(7) சிவனே, ஒருவற்கு உற்ற நித்தமாகிய அத்தன் அன்னை முதலிய எல்லாச் சார்புகளும் ஆவன். |
தலவிசேடம்: திருநாட்டியத்தான்குடி:- முன்னர் உரைத்தது கடைப் பிடிக்க. |
57. கோட்புலிநாயனார் புராணம் முற்றும் |
10-கடல் சூழ்ந்த சருக்கம் முற்றிற்று |