பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்450


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

பதினொன்றாவது

பத்தராய்ப்பணிவார் சருக்கம்
_ _ _ _ _
 

திருச்சிற்றம்பலம்
 

 
பத்தராய்ப் பணிவார்க் ளெல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்
அப்பாலு மடிச்சார்ந்த வடியார்க்கு மடியேன்
ஆரூர னாரூரி லம்மானுக் காளே.

- திருத்தொண்டத்தொகை - (10)

திருச்சிற்றம்பலம்