பக்கம் எண் :

பெரியபுராணம்453

பலரும் காணும்படி பயன் பெறுவார்கள்; மேவரிய...மேலானார் - பொருந்துதற்கரிதாகிய
அன்பின் றிறத்தாலே மேம்பாடுடையவர்களுக் கெல்லாம் மேம்பாடுடையவர்களாய்
விளங்குவார்கள்.
 
     (வி-ரை) தாவரிய - கெடுதலில்லாத; தா - கேடு; தாவு - குறைதல்; சம்பு -
சுகத்துக்கிருப்பிடமானவர்.
 
     அர்ச்சிக்குபடி - பூசிக்கும் படியினை; படி - படியை; பண்பினை. இரண்டனுருபு
விரிக்க.
 
     உவந்து - பயன்பெறுவார் என்று கூட்டுக.
 
     பாவனையால் - நோக்கினால் - பூசனையை உவந்து நோக்கும் இப்பத்தர்களை
அவ்வாறு பூசிப்பவர்கள் சத்பாவனை செய்து நன்னோக்கம் செய்தலால்; பாவனை -
நோக்கம்
- இவர்கள் நன்மைபெறுக என்ற எண்ணத்துடன் செய்வன.
 
     பலர்காண - “பல்லோருங் காணவென்றன் பசுபாச மறுத்தானை” (திருவா).
 
     பாவனையால் நோக்கினால் - முன்கூறியவாறன்றி, இதற்கு, இப்பத்தர்கள்
அவர்களை சிவமாகப் பாவிப்பதனாலும் அவ்வாறு நோக்குதலினாலும் என்றுரைத்தனர்
முன் உரைகாரர்.
 
     மேலவர்க்கு மேலானார் - பிற மேன்மைகள் படைத்த எவர்க்கும் இவரே மேல்
என்று கூறும்படி என்க.                                            2
 
4149. அங்கணனை அடியாரை யாராத காதலினாற்
பொருங்கிவரு முவகையுடன் றாம்விரும்பிப் பூசிப்பார்
பங்கயமா மலர்மேலான் பாம்பணையா னென்றிவர்கள்
தங்களுக்குஞ் சார்வரிய சரண்சாருந் தவமுடையார்.                3
 
     (இ-ள்) அங்கணணை....பூசிப்பார் - இறைவரையும் அடியார்களையும்
ஆராமையுடைய பெருவிப்பத்தினாலே மேன்மேலும் பொங்கி வருகின்ற மகிழ்ச்சியுடனே
விரும்பிப் பூசிப்பார்கள்; பங்கயம்.....தவமுடையார் - தாமரைப் பூவின்மேல் இருக்கும்
பிரமதேவனும் பாம்பணையின் மேலிருக்கும் விட்டுணுமூர்த்தியும் என்ற இவர்களுக்கும்
 சார்தற்கரிய திருவடிகளைச் சாரும் தவத்தினை உடையவர்கள்.
 
     (வி-ரை) அங்கணனை அடியாரை - மலர்மேலான் - அணையான் -
எண்ணும்மைகள் தொக்கன.
 
     தவமுடையார் - முன்னைத் தவமுடையாரே பத்தர்களாவார்கள்; சார்பு -
“சார்புணர்ந்து” (குறள்)
 
     தங்களுக்கும் - உம்மை உயர்வு சிறப்பு; சார்தல் - அடைதல்.
 
     பத்தராய் - என்ற தொகை நூலுக்கு இறைவர்பாலும் அடியார்பாலும் ஒன்று
போலவே பத்திசெய்வது என்று உரை விரிப்பது இத்திருப்பாட்டு.           3
 
4150. “யாதானு மிவ்வுடம்பாற் செய்வினைக ளேறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பாலாக” வெனும்பரிவாற்
காதார்வெண் குழையவர்க்காம் பணிசெய்வார் கருக்குழியிற்
போதார்க ளவர்புகழ்க்குப் புவனமெலாம் போதாவால்.           4
 
     (இ-ள்) யாதானும்......எனும் பரிவால் - இந்த உடம்பினாற் செய்யும் செயல்கள்
எவையேயாயினும் அவையெல்லாம் இடபத்தினை உயர்த்த பெருமானது