பக்கம் எண் :

பெரியபுராணம்457


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

59. பரமனையேபாடுவார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (10)
 

வகை
 

“தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை யவ்வகை யாலவ்விண் டோயுநெற்றி
வகுத்த மதிற்றில்லை யம்பலத் தான்மலர்ப் பாதங்கண்மே
லுகுத்த மனத்தொடும் பாடவல் லோரென்ப ருத்தமரே ”

    - திருத்தொண்டர் திருவந்தாதி - (71)
 

விரி
 

4155.    புரமூன்றுஞ் செற்ற னைப் பூணாக மணிந்தானை
யுரனில்வரு மொருபொருளை யுலகனைத்து மானானைக்
கரணங்கள் காணா மற் கண்ணார்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம்.                  1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பதினொன்றாவது பத்தராய்ப்பணிவார்
சருக்கத்துள், இரண்டாவது, பரமனையே பாடுவாரது புராணம் கூறத் தொடங்குகின்றார்.
பரமனையே பாடுவாரது பண்புகூறும் பகுதி.
 
     தொகை :- இதன் பொழிப்பு முன் உரைத்தவாறு உரைத்துக்கொள்க;
பரமனையே - ஏகாரம் பிரிநிலை; பாடுதல் - ஈண்டு இயலிசைப் பாட்டினைக்குறித்தது;
இசை - கீதம் என்பன ஒரு பொருள்; முன்னர்ப் பொய்யடிமையில்லாத புலவர்கள்
பாடியன வேறு; அவை இயற்றமிழ்ப் பாட்டுக்கள்; இவை கீதங்கள்; இசையுடன்பாடும்
இயற்பாட்டுக்கள். “சொயவலகீதம்” “கீதத்தை மிகப்பாடு மடியார்கள்”.
 
     வகை :- தொகுத்த...தோன்றியதே - சிறப்பாகத் தொகுக்கப்பட்ட வடமொழியும்,
தென்மொழியும் என்னும் இவற்றுள் எது தங்களுக்குக் கைவந்ததோ அதனில்;
மிகுத்த....வகையால் - மேலான இயலும் இசையும் என்ற இருவகையாலும்;
விண்தோயும்...பாதங்கள் மேல் - ஆகாயத்தை அளாவும் முடியின் அமைதியுடைய
மதில்சூழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் இறைவரது மலர்போன்ற