உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
60. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (10) |
வகை |
| உத்தமத் தானத் தறம்பொரு ளின்ப மொடியெறிந்து வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி மத்தம்வைத் தான்றிருப் பாத கமல மலரடிக்கீழ்ச் சித்தம்வைத் தாரென்பர் வீடுபே றெய்திய செல்வர்களே. | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (72) |
விரி |
4157. | காரணபங் கயமைந்தின் கடவுளர்தம் பதங்கடந்து பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத் தாரணையாற் சிவத்தடைந்த சித்தத்தார் தனிமன்றுள் ஆரணகா ரணக்கூத்த ரடித்தொண்டின் வழியடைந்தார். 1 |
புராணம் :- இனி, நிறுத்த முறையாளே, பதினொன்றாவது பத்தராய்ப் பணிவார் சருக்கத்தில், மூன்றாவதாகச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் பண்பு கூறும் பகுதி. |
தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க. |
சித்தம் - உள்ளம்; சிவன்பாலே - ஏகாரம் பிரிநிலை; ஏனை அதிகாரக் கடவுளர்பாலன்றிச் சிவன்பாலே என்க. “கடவுளர்தம் பதங்கடந்து” (4157) என்பது விரிநூல்; வைத்தல் - பொருத்துதல்; சித்தத்தைச் சிவன்பாலே வைத்தல் என்பது சித்தத்துள்ளே சிவனை வைத்தலும் சிவனையன்றி வேறெவரையும் வைக்காமையுமாம்; “பொது நீக்கித் தனைநினைய வல்லோர்க்கு” (தேவா). |
வகை :- உத்தமத்தானத்து...எறிந்து - உத்தமமாகிய சிவபுண்ணிய மேலீட்டினாலே அறமும், பொருளும், இன்பமுமென்னும் காட்டினை ஒடிபோலாக்கி யெறிந்து; வித்தகத்தானத்து ஒரு வழிக்கொண்டு இதயம் முதலியனவாகிய ஐந்து ஞான |