பக்கம் எண் :

பெரியபுராணம்461

இருப்பிடங்களாகிய தானங்களையும் கடந்து, அதன்மேல் சுழுமுனை திறந்து
அவ்வழியே சென்று; விளங்க...கீழ் - விளங்கும்படி தலையில் ஊமத்தப் பூவைச்சூடிய
இறைவரது திருவடிக்கீழ்; சித்தம் வைத்தார்......செல்வர்களே - சித்தத்தை நிறுத்தி
வைத்தவர்கள் இம்மையிலே வீடுபேற்றினை அடைந்த செல்வர்களே என்பர்.
    

     உத்தமத்தானம் - சிவபுண்ணியம்; எதுகைநோக்கித் தகரம் மிக்கது;
அறம்பொருளின்பம் என்பவை உலகநெறி நிறுத்தற் பயத்தனவையே யன்றி வீட்டுக்குரிய
சாதனமாகா; இவை மூன்று பரனைநினைந்து விட்ட நிலையே வீடுபேறாம் என்ப;
“பரனைநினைந் திம்மூன்றும், விட்டதே பேரின்ப வீடு” என்றது காண்க. அவ்வாறு
பரனைநினைந்து செய்வன சிவபுண்ணியச் செயல்களேயாம். ஆதலின் உத்தமதானம் -
எனப்பட்டவை சிவபுண்ணிங்களாம்; அறமுதலிய மூன்றன் நிலைகளையும்
விடுத்தெறிதலை ஒடி எறிந்து - என்றார்; ஒடியாகக்களைந்து, ஒடி - சிறுகிளைகளை
ஒடிக்கும் நிலை; “ஒடி யெறிந்து” (724) ஒடித்தலாலுளதாவது ஒடி; வித்தகத்தானம்.
ஞான நிலயங்கள் ஐந்து; இதயம் - கண்டம் - நாவினடி - புருவநடு - பிரம்மரந்திரம்
என்பன. இவற்றின் தானங்கள் ஐந்து கமலங்கள் எனப்படும்; இவற்றையே “காரணயிங்
கயமைந்தின் கடவுளர்தம் பதம்” என்பது விரிநூல் (4157); தானத்து -
தானங்களின்மேல் செல்லும்; ஒருவழி - சுழுமுனை; “ஒரு வழியைத் திறந்து”
(திருவாதவூரர் புரா - பெருந் - சருக். 71); வழிக்கொள்ளுதல் - அவ்வொருவழியிலே
செல்லுதல் - “நாதாந்தத் தாரணையாற் சிவத்தடைந்த” (4157); மலரடிக்கீழ்ச்
சித்தம்வைத்தார்
- “பூரண மெய்ப் பரஞ்சோதி...சிவத்தடைந்த” (4157);
வீடுபேறெய்திய செல்வர்களே என்பர் - இம்மையிலே சீவன்முத்தர்கள் என்று
சொல்லுவர். “எவருமறியச் சீவன்முத்தரா யிங்கிருப்பவர்கள்” புராணவரலாறு (26);
மத்தம் - ஊமத்தமலர்.
 
     விரி:- 4158. (இ-ள்) காரண....கடந்து - பிராமன் முதலாகிய காரணக் கடவுளர்
ஐவர்க்குமுரிய ஐந்து தாமரைகளுடனிருக்கும் தானங்களைக் கடந்து மேற்சென்று;
(அப்பால்) பூரண...தாரணையால் - நிறைவுடையதாய், உள்பொருளாய், சுயஞ்சோதியாய்
உள்ள சிவம் ஞான ஒளிவீசி விளங்கும் நாதாந்தத்திற் சித்தத்தை நிறுத்துதலினாலே;
சிவத்தடைந்த சித்தத்தார் - சிவத்தினிடத்தே நிறுத்திய சித்தத்தையுடைமையால்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் என்கின்றவர்கள்; தனிமன்றுள்...அடைந்தார் -
ஒப்பற்ற திருவம்பலத்தினுள் விளங்கும் வேதகாரணராகிய கூத்தருடைய திருவடித்
தொண்டின் வழியிலே நின்று அவரை அடைந்தவர் எனப்படுவர்.
 
     (வி-ரை) காரணபங்கயம் ஐந்தின் கடவுளர் தம்பதம் - படைத்தல் முதலிய
ஐந்தொழில் செய்யும் பிரமதேவர் முதலிய அதிகாரக்கடவுளராகிய ஐம்பெருங்
கடவுளர்களும் இருக்கும் ஐவகைத் தாமரைப்பீடங்களையுடைய பதங்கள்; பதவிகள்.
காரணம் - ஆதார காரணம்;
 
     கடவுளர் தம்பதம் கடந்து பூரண மெய்ப்பரஞ்சோதி பொலிந்திலங்கு
நாதாந்தம்
என்றது இவ்வைந்து அதிகாரக் கடவுளர் பதங்களுக்கு மேலாகிய
நாதாந்தத்துட் சிவனிருக்குமிடம்.
 
     நாதாந்தத் தாரணையாவது - நாதாந்த பதத்தினிற் சித்தத்தை நிறுத்துதல்.
நாதாந்தம் - சுத்த தத்துவங்களாகிய விந்துநாத முதலியவையும் நீங்கிய பரமுத்தியாகிய
சிவசாயுச்சியப் பேறாகலான் நாதாந்தம் எனப்பட்டது.
 
     கடந்து....தாரணையாற் சிவத்தடைதலாவது அட்டாங்கயோகத்துள் இயமம்
நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் என்னும் ஐந்தினையும் பயின்று, மேல்,