பக்கம் எண் :

பெரியபுராணம்463

செய நின்றநற் சோதியே” (அரசு - ஆதிபுராணக் குறுந் - 2) என்பன முதலியவை
காண்க. இவர்களோ சிவபேதங்களாவர்; சிவனே, படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச்
செய்யும் பொருட்டு இவ்வடிவங்களை மேற்கொண்டு இப்பதங்களில் அவ்வக்
கமலங்களில் வைகுவர் என்பதும், இவ்வடிவங்களைப் பின்வரும் பிரமன் முதலியோர்
கொண்டு அவ்வவர்க்கு நியமித்த படைப்பாதி தொழில்களைச் செய்குவர் என்பதும்
ஞானநூல்களாலறியப்படும்; “சுரர்முத லியர்திகழ்தரு முயிரவை யவைதம, பவமலி
தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய சிவன்"- (1) "உலகுகள் நிலைபெறு
வகை நினை வொடுமிகும், அலைகட னடுவறி துயிலம ரரியுரு வியல்பரன்" (2) "உயி
ரவையவை, முழுவது மழிவகை நினைவொடு முதலுரு வியல்பரன்" (3) என்ற
ஆளுடைய பிள்ளையாரது (திருச்சிவபுரம் - திருவிராகம் - நட்டபாடை) தேவாரமும்
காண்க.
    

     சிவத்தடைந்த சித்தத்தார் - "சித்தத்தைச் சிவன்பாலே வைததார்" என்று
முதனூலிற் போற்றப்பட்டோர்; முன்கூறிய முறைப்படி சிவத்தை யுணர்ந்து, கலந்து,
தன்னை மறந்திருக்கும் நிலை; இது சிவயோக சமாதி எனப்படும். இதன் விரிவு
சித்தாந்த சாத்திரங்களிலும், காசிகாண்டம், வாயுசங்கிதை முதலிய நூல்களிலும்,
திருமந்திர முதலாகிய சிவாகமங்களிலும் கண்டுகொள்ளவும், அனுபவமுடைய
தேசிகர்கள்பால் உபதேசமுகத்தால் அனுசந்திக்கப்படவும் உரியது; "ஓட்டற்று நின்ற
வுணர்வு பதிமுட்டித், தேட்டற் றிடஞ்சிவ முந்தீபற; தேடு மிடமதன் றுந்தீபற" உந்தி.
(13); "மெய்ம்மைச், சிவயோக மேயோக மல்லாத யோக, மவயோக மென்றே யறி"
(களிறு - 74) "ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று, மீதானத் தேசெல்க வுந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற" (உந்தி - 8), "திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று,
நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற; நேர்பட வங்கேநின்றுந்தீபற" (மேற்படி 17),
என்றுவரும் சிவாகமங்களும், "ஒருவழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலி
யுடன்போய்த், தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந் தன்மை கண்டரு டரும்பெரு
வெளிக்கே, புக்கழுந்தினர்" (திருவாத - புரா - பெருந். 71); முச்சதுர முதலாதாரங்கள்,
அகமார்க்க மறிந்தவற்றி னரும்பொருள்க ளுணர்ந்தங் கணைந்துபோய் மேலேறி
யலர்மதிமண் டலத்தின், முகமார்க்க வமுதுடல முட்டத் தேக்கி, முழுச்சோதி
நினைந்திரு
த்தல் முதலாக வினைகள், உகமார்க்க வட்டாங்க யோக முற்று முழத்தல்"
(சித்தி. 8-21) என்பனமுதலாக வருவனவும், பிறவும் காண்க.
 
     சித்தத்தார் - அடித்தொண்டின் வழியடைந்தார் - அடித்தொண்டின்வழி -
சரியையாதி நானெறி; இவற்றுள் சரியை கிரியை முற்றிச் சிவயோகத்தே வழிவந்தோரே
சிவன்பாலே சித்தம் வைத்தற்குரியார் என்பதுமாம்.
 
     ஆரண காரணக் கூத்தர் - இறைவர் தமது கூத்தினாற் சுத்தமாயையினின்றும்
வேதங்களைத் தோற்றுவிக்கின்றார் என்பதாம்.
 
     சித்தத்தை சிவன்பாலே வைத்தார் புராணம் - பண்பு - ஐம்பெருங்
கடவுளரது பதங்களாகிய காரணபங்கயமைந்தும் கடந்து தாரணையாலே பூரணமெய்ப்
பரஞ்சோதி பொலிந்து விளங்கும் நாதாந்தத்தில் சித்தம் வைத்துச் சிவத்தையடைந்து
நிற்பவர்கள் சித்தத்தை சிவன்பாலே வைத்தார் எனப்பெறுவார்கள்.
 
     கற்பனை :- (1) அட்டாங்க லோகத்தின் வழியேசெய்யப்படும் தாரணையினால்
நாதாந்தத்திலே விளங்கும் சிவன்பாலே சித்தத்தினைப் பிறழாமல் நிறுத்துதல் சிவனை
அடையும்வழி; (2) இது யோக நெறி.
 

60. சித்தத்தைச் சிவன்பாலேவைத்தார் புராணம் முற்றும்.