உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
61. திருவாரூர்ப்பிறந்தார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| "திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்" | |
- திருத்தொண்டந்தொகை - (10) |
வகை |
| "செல்வந் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார் செல்வன் றிருக்கணத் துள்ளவ ரேயத னாற்றிகழச் செல்வம் பெருகுதென் னாரூர்ப் பிறந்தவர் சேவடியே செல்வ நெறியுறு வார்க்கணித் தாய செழுநெறியே" | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (73) |
விரி |
4158. | அருவாகி யுருவாகி யனைத்துமாய் நின்றபிரான் மருவாருங் குழலுமையாண் மணவாளன் மகிழ்ந்தருளுந் திருவாரூர்ப் பிறந்தார்க டிருத்தொண்டு தெரிந்துணர ஒருவாயாற் சிறியேனா லுரைக்கலாந் தகைமையதோ? 1 |
புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பதினொன்றாவது பத்தராய்ப் பணிவார் சருக்கத்துள், நான்காவது திருவாரூர்ப் பிறந்தார்கள் புராணங் கூறத் தொடங்குகின்றார்; இவர்களது பண்புகூறும் பகுதி. |
தொகை :- பொழிப்பு உரைத்துக்கொள்க. எல்லார்க்கும் - முற்றும்மை; திருவாரூரிற் பிறக்கும் முன்னைத் தவமுடைய எல்லா வுயிர்களையும் உள்ளடக்கி நின்றது; "திருவாரூர்த் தோற்றமுடை யுயிர்கொன்றான்" (126) "சங்கையிலா வருந்தவ முன் புரிந்தார்" (புராணசாரம்.) |
வகை :- செல்வம்...அதனால் - செல்வம் விளங்கிய திருவாரூரின் திருமதிலின் வட்டத்தினுட் பிறந்தவர்கள் சிவபிரானது திருக்கணத்திற் சேர்ந்தவர்களேயாவர்; ஆதலினால்; திகழ....சேவடியே - விளங்க உயர்ந்த வளங்கள் பெருகும் தென்றிருவாரூரிற் பிறந்தவர்களின் திருவடியே; செல்வ....நெறியே - வீட்டு நெறியினை அடைவார்களுக்கு அணிமையாகிய நல்ல நெறியாகும். |
செல்வம் - சொற்பின் வருநிலை; மதில்வட்டம் - நகரின் மதிலாற் சூழப்பட்ட இடம்; சோழ அரசரது தலைநகராதலாலும், தியாகராசர் ஆளும் நகராதலாலும் இது |